மகாபாரத கதாபாத்திரங்கள்-சிகண்டி பிறப்பு

சிகண்டி பிறப்பு

காசி இளவரசியான 
அம்பா (அம்பை) ஐ சால்வன் காதலித்தவன

பீஷ்மர் காசி இளவரசிகளை குரு நாட்டு இளவரசனான விசித்திரவீரியனுக்காக 
தனது தேரில் வைத்து கடத்திச் செல்கையில், சால்வ நாட்டு இளவரசன் தனது காதலியான அம்பாவை மீட்க, பீஷ்மருடன் போரிட்டு தோற்கிறான். அம்பா, சால்வ இளவரசனின் காதலி என அறிந்த பீஷ்மர், அம்பாவை சால்வனிடம் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் சால்வ இளவரசன் அம்பாவை மணக்க மறுத்தான். தன் காதலனை அடைய தடையாக இருந்த பீஷ்மரை அடுத்த பிறவியில் கொல்லச் சபதம் மேற்கொண்டு தீக்குளிக்கிறாள். அம்பா மறுபிறவியில் துருபதனுக்கு மகளாக  சிகண்டியாக பிறந்து பீஷ்மரின் இறப்புக்கு காரணமாகிறாள்.

(சிகண்டி ஆணாக பிறந்த பெண்மை குணங்களை கொண்டவன் என்றும் கூறப்படுகிறது.
பெண்னை திருமணம் முடிந்து உண்மை அறியும் சமையம்  அவமானம் அடைந்து காட்டிற்கு சென்று தற்கொலை முயற்சி செய்கிறான்.
யக்ஷனின் அருளால் ஆண்மை கிடைக்கப்பெற்று நாட்டிற்கு திருப்பி மனைவியுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்று வாழ்ந்தான் என்ற கதையும் உண்டு)

இறப்பு
குருச்சேத்திரப் போரின் பதினெட்டாம் நாள் போருக்குப்பின் அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டாள்


Comments