மகாபாரத கதாபாத்திரங்கள்- பீஷ்மர் பிறப்பு

பீஷ்மர் பிறப்பு


காசிபர் - வாசு (தட்சனின் மகள்) தம்பதிகளின் மகன்கள் அஷ்டவசுக்கள் .
அஷ்டவசுக்கள் என்பவர்கள் இயற்கையை நிர்வகிப்பவர்கள்.

 அவர்களில் பிரபாசன் என்ற 
வசு தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மற்ற வசுக்களுடன் சேர்ந்து வசிஷ்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில் வசிஷ்டரால் மண்ணுலகில் பிறக்க சாபமிட்டார் .
மண்ணுலகில் பிறக்கும்போது பிரபாசனுக்கு  மனைவி பாக்கியம் இருக்காது என்றும் சாபமிட்டார்.
அதன்மூலமாக அஷ்டவசுக்கள் தேவலோக மங்கையான கங்கையை அணுகினர் மற்றவர்களுக்கு மண்ணுலகில் பிறந்தவுடன் சாபவிமோசனம் பெறவும் பிரபாகரனுக்கு மட்டும் மண்ணுலகில் நெடுங்காலம் வாழவும் கங்கையின் மைந்தர்களாக பிறக்க வேண்டிக்கொண்டனர்.
அதன்படி கங்கை (கணவர் சந்தனு) தனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் பிறந்தவுடன் ஆற்றில் விட்டார்.
 எட்டாவது மகனான தேவவிரதனை (பீஷ்மர்)வளர்த்து ஆளாக்கி  அவனது தந்தையான சந்தனு மகாராஜாவிடம ஒப்படைத்தார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி