சமூகப் பார்வை

திருமதி ஏ.விஜயசக்தி, இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்.
நாமக்கல் மாவட்டம்

கோவை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது
நிறுவனம் சார்ந்த சமூக சேவைகள்
மற்றும் தனி நபராக சமூகப் பார்வை.

1)நிறுவனம் சார்ந்த சமூக சேவைகள்

கொரானா காலகட்டத்தில் ஆற்றிய சேவைகள் video பதிவேற்றம்
  • ஸ்தாபனத்தின்   வாயிலாக நிறுவனங்களின் (Sponsors) பங்களிப்புடன் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பணியாளர் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  கபசுர குடிநீர் பொடி இலவசமாக வழங்கியது. மேலும் நிறுவன வாடிக்கையாளர்கள், கோவை மாவட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கியது.



               



  • கொரொனா ஊரடங்கு கால கட்டத்தில் ஸ்தாபன செயல்    எல்லையில் உள்ள கிராம பொதுமக்களின் வாழ்வாதாரம் காத்திட             

     விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அந்தந்த 

     கிராமங்களுக்கு நேரில் சென்று வாகனம் மூலம் இலாப 

     நோக்கமின்றி நடமாடும்  மலிவு விலை காய்கறி விற்பனை 

     மேற்கொண்டபோது:-


WhatsApp Image 2020-10-14 at 11 

  • கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், டியூகாஸ் பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்திட ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் வாயிலாக பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சியினை கல்லூரி நிர்வாகமும், மாணவர்களின் தொழிற்பயிற்சியினை வழங்கிடும் டியூகாஸ் நிர்வாகமும் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

  •  

                        WhatsApp Image 2020-10-14 at 12 


    •   நமது மத்திய அரசின் பிரதம மந்திரி தூய்மை இந்தியா திட்டத்தின் SWATCH BHARAT SCHEME)  திட்டத்தின் மூலம் டியூகாஸ் நிறுவன பணியாளர்களும் ஸ்ரீராமகிருஷ்னா மிஷன்  வித்யாலயா மாணவர்களும் இணைந்து சமுதாயத்தை உயர்த்திடும் நோக்கோடு ஸ்தாபன முன்னாள் தலைவர் டி.என்.பி. அவர்களின் கிராமமான அப்பநாயக்கன் பாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை தூய்மை செய்து சுவர்களுக்கு வெள்ளை அடித்து, மேற்படி கிராமத்தில் பசுமை இந்தியா திட்டத்திற்கு வித்திடும் வகையில் மரக்கன்றுகளை நட்டும், கிராமங்களில் உள்ள தெருக்களை பசுமை தூய்மை பணி மேற்கொள்ளச் செய்தல்.

                swa2 sw3

    • ஆண்டுதோறும் கொங்கு மண்டலத்தில் உள்ள கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஸ்தாபனத்திற்கு வருகை புரிந்து இதன் செயல்பாட்டினை அறிந்துகொள்ள வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ஸ்தாபனத்தின் தோற்றம், வரலாறு மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்திடும் வகையில் குறும்படம் தயாரிக்கப்பட்டது.  இந்த ”டியூகாஸ் ஆவணப்படம் வெளியீட்டு விழா” அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் செய்லாக்கத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது ..இதனை Tucas YouTube channel ஆரம்பித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


WhatsApp Image 2020-10-15 at 11

  
      * கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஊரடங்கு அமலில் இருந்தபோதும் கூட்டுறவுத் துறை மற்றும் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் சேவையை பாராட்டி TUCAS ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட்டது.

     *ஸ்தான வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.


ஸ்தான கடன் நிலுவை 100 கோடி உயர்வு ஏற்பட பாடுபட்ட பணியாளர்களுக்கு சிறப்பான புத்தாண்டு நிகழ்ச்சி 2020 கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஸ்தாபன எல்லையிள்ள அரசு பள்ளிகளுக்கு பீரோ, மற்றும் தண்ணீர் டேங்குகள் உள்ளிட்ட தேவைப்படும்  பொருட்கள் ஆகியவற்றை ஸ்தாபனம் ( A உறுப்பினர்கள் வழங்கியுள்ள பங்கு ஈவுவட்டி மூலமாக) குழந்தைகள் நலன் கருதி அரசுப் பள்ளிக்குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் இலவசமாக வழங்கி வருகின்றோம்.



         * விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு  “இலவச மருத்துவ முகாம் “ ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.


         * பணியாளர்கள் சமூக நலன் தெரிந்து கொள்ளும் பொருட்டு நிறுவன பணியாளர்களுடன் பொங்கல் விழா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.


2) தனிநபராக சமூகப் பார்வை:

  • தமிழகத்தில் பல மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லுரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு  வாழ்விலும், தேர்விலும் வெற்றி பெறவும் மனதைரியத்துடன் வாழ்வினை அனுகவும்  புத்தாக்கப் பயிற்சியினை அவ்வப்போது வழங்கி வருகின்றேன்.

  

                

                  

  • கொரொனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் நிறுவனத்தின் மூலமாகவும், தனிநபராகவும் நின்று பொதுமக்களுக்கு சேவை வழங்கிய நிர்வாகத்திறனுக்காக HDFC  வங்கியினரால்                              OUR NEIGHBOURHOOD HEROES என்ற பாராட்டு மடல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது..

             

  • கொரொனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் சாமானிய மக்கள் அன்றாட உணவுக்கு வழி தெரியாத சூழ்நிலையில் நிதியுதவி பெற்று பேரன்பு அறக்கட்டளை வாயிலாக பொதுமக்களுக்கும், சுகாதாரத்துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை பணியாளர்களுக்கும் உணவளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எனது சேவையை பாராட்டி (PERANBU FOUNDATION)  மூலம் எனக்கு பாராட்டு மடல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


       





  • இதனை தொடர்ந்து தன்னம்பிக்கை மாத இதழில் ”வாழ்வியல் கலை” என்ற  தலைப்பில் மாதம் ஒரு கட்டுரையாக இது வரை  கீழ்க்காணும் பாகம் 17 வரை வெளிவந்துள்ளது.

  • தன்னம்பிக்கை பத்திரிகை பக்கத்தில் எனது காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

வாழ்வியல்  கலை கட்டுரைகள்

14) பாகம் - 14 மாற்றம் ஒன்றே மாறாதது
15) பாகம் - 15  நிகழ்காலத்தில் வாழ்தல்
16) பாகம் - 16 ஆண் பெண் உளவியல்
17) பாகம் - 17 உறவுகளுடனான பயணம்
18) பாகம் - 18 நேர்மறை உணர்வுகள்

     * மேலும் வாழ்வியலுக்கு தேவையான தலைப்புகளில் 

Audio பதிவுகள் (Self Esteem) மேற்கொண்டு வருகிறேன்.

* அரசுப்பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயிலவும், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளவும், மேற்படி மாணவர்களை தயார்படுத்திட புத்தாக்க பயிற்சியுடன் தன்னம்பிக்கை ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.


*சமுதாயத்தில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் திறமையை வெளிக்கொணரும் பொருட்டும், இளைஞர்களின் தன்னம்பிக்கையினை தட்டி எழுப்பும் சமூகம் சார்ந்த மேடைப் பேச்சுகள் (MOTIVATIONAL CLASSES) மூலம் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

*சமூகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை பட்டிமன்ற விவாதத்தின் மூலம் சமுதாயத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படக்கூடிய ன் நல்லொழுக்க கருத்துக்களை எடுத்துரைத்து பட்டிமன்ற நடுவராகவும், பேச்சாளராகவும் இருந்து வருகின்றேன்.

 பட்டிமன்றம் YouTube link




  • சமுதாயத்தில் இன்றைய தலைமுறையினருக்கு பண்டைய புராணங்களான மகாபாரதம்  என்ற  இதிகாச காப்பியத்தில் வரும் 150க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களின் பிறப்பு, தோற்றம், அதன் சிறப்பு ஆகியவற்றை தொகுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

       

        நன்றி

                             திருமதி.ஏ.விஜயசக்தி

 இணைப்பதிவாளர்

கூட்டுறவு துறை

தமிழக அரசு


 Mail id- 

vijayasakthijrcs@gmail.com








Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி