Posts

சத்துமாவு

சத்துமாவு அரைக்க தேவையான பொருட்கள்  (Ingredients) அரிசி மற்றும் கோதுமை வகைகள் தலா ஒரு டம்ளர் (ஊறவைத்து கழுவி காயவைத்து) 1)கைக்குத்தல் அரிசி 2) மாப்பிள்ளை சம்பா அரிசி  3) கருப்பு கவுனி அரிசி  4) மூங்கில் அரிசி 5)சம்பா கோதுமை  பயறு வகைகள் ( தனித்தனியாக வறுக்கவும்) 1) கம்பு 500g 2) கேழ்வரகு 500g 3) வெள்ளை சோளம்  500g (மற்றவை அனைத்தும் நலா 100g) 4) சிவப்பு சோளம் 5) கருப்பு கொண்டைக்கடலை 6)ராஜ்மா 7) பச்சை பட்டாணி  8)பாசி பயிறு  9)கொள்ளு 10) மக்கா சோளம்  ஜுரணம் மற்றும் உடல் சூடு தணிக்க(வறுத்து) 2)சுக்கு 50g  ( Protein and taste) (வறுத்து) 1)வேர்கடலை 200g 2)பாதாம்  200g 3)வெள்ளை எள் 50g 4)சவ்வரிசி 100g 5)பார்லி 100g 6)பொட்டுக்கடலை 100g 7)சோயா பீன்ஸ் 100g 8)கருப்பு உளுந்து 100g சிறுதானிய வகைகள் (வறுத்து) (தலா 100 கிராமம்) 1)தினை 2)சாமை 3)வரகு 4)குதிரை வாலி அளவுகள் அவரவர்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம். சத்து மாவில் செய்யக்கூடிய உணவுகள்  சத்துமாவு கூழ்  சத்து மாவு களி  சத்துமாவு முருங்கைக்கீரை அடை  சத்து மாவு கஞ்சி ( இனிப்பு...

நெல்லிக்காய் டீ

நெல்லிக்காய் டீ  நெல்லிக்காய்   உடலுக்கு மிகவும் சிறந்த உணவு அதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்மைகள்   அல்சரை குணமாக்குகிறது,  எடை குறைய உதவுகிறது மலச்சிக்கலை சரி செய்கிறது,  ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, பார்வையை மேம்படுத்துகிறது,  ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது,  நீரிழிவை தடுக்கிறது,  கல்லீரலுக்கு நல்லது, இதயத் தசைகளை வலிமையாக்குகிறது, முடி பிரச்சினைகளை சரி செய்கிறது, ஞாப சக்தியை வலுவாக்குகிறது, கெட்ட கொழுப்பை குறைக்கிறது, ஞாபகசக்தியை அதிகரிக்கிறது, பொலிவான முகத் தோற்றம், வயது முதிர் தோற்றத்தினை குறைக்கிறது,  சருமத்தின் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.  இன்னும் ஏராளமான பலன்கள் உண்டாகும். தினசரி Fresh நெல்லிக்காயை பயன்படுத்தலாம் அல்லது நெல்லி சாற்றினை Ice cube ஆக தயார் செய்து Freezer ல் வைத்து டீ போடும்போது பயன் படுத்தலாம்  நெல்லிக்காய் டீ செய்முறை   நெல்லிக்காய் ஜூஸ் சிறிதளவு  இஞ்சி சிறிதளவு  10 புதினா இலைகள்  5 செம்பருத்தி பூக்கள்  ஆகியவற்றை கொதிக்கவைத்து வடிகட்டி  எலுமிச்சை சாறு மற்றும் ...

பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள்  இந்த புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்  கர்ப்பத்தினாலும், பிள்ளைகளை பெறுவதனாலும், பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், அடிமைத்தனங்களையும் எடுத்துக்காட்டவும் மற்றும் பிள்ளைகளை அதிகமாக பெறுவதனால் ஆண் பெண் இவர்களுக்குள்ள கஷ்டங்களையும் எடுத்துக்காட்டுவதுடன் பெண்கள் நலத்துக்கு ஆண்களால், ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும்  நன்மை ஏற்பட்டு விடாது என்றும் பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக் கொண்டு தங்களுக்கு தாங்களே பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்ததே எழுதப்பட்டது இந்நூல் என்கிறார் பெரியார்  தலைப்புகள்   1) கற்பு 2) கற்பும் வள்ளுவரும்   3) காதல் 4)கல்யாண விடுதலை  5) மறுமணம் தவறல்ல  6) விபச்சாரம்  7) விதவைகள் நிலைமை  8 ) சொத்துரிமை  9)கர்ப்பத்தடை 10) பெண்கள் விடுதலைக்கு " ஆண்மை"  அழிய வேண்டும் . மேலும் விவரங்களுக்கு  புத்த...

பெண் ஏன் அடிமையானாள் தலைப்பு 3 - காதல் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 3 - காதல ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  காதல்   காதல் என்றால் என்ன?  அதற்கு சக்தி என்ன?  அது எப்படி உண்டாகிறது?  அது எதுவரையில் இருக்கின்றது?  அது எந்தெந்த சமயங்களில் உண்டாகிறது?  அது எவ்வபோது மறைகின்றது ? அப்படி மறைந்து போய்விடுவதற்கான காரணம் என்ன? என்பதைப் போன்ற விஷயங்களை கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை பிரதானப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவை எளிதில் விளங்கிவிடும் என்கிறார் பெரியார். காதல் என்பது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரம் தான் இருக்க முடியும் . அப்படி வேறு ஒருவரிடம் ஏற்பட்டால் அது காதலாக இருக்க முடியாது அது விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டும் என்றும்  ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமும் விரசமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது. இந்த காதல் காரணத்தா...

ஆரோக்கியமான உணவுகள் (7)

ஆரோக்கியமான உணவுகளின் சமையல் குறிப்புகள்  உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவுகள் பிரதான பங்கினை வகிக்கின்றன . எனவே நாம் நல்ல உணவுகளை வீட்டில் தயார் செய்து தினமும் சாப்பிடும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக இங்கு சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன பசித்த பின் புசி -  இதவே உடல் ஆரோக்கியத்திற்கான தாரக மந்திர பொன்மொழி ஆகும். இதனை சரியாக பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பசி வந்த பிறகு சாப்பிடுவதும், தாகம் எடுத்த பிறகு நன்கு தண்ணீர் அருந்துவதும் மேலும் உடல் மொழிகளை கவனித்து நடப்பதும்,  மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைப்பதும்  உடல் ஆரோக்கியத்திற்கான படிகளாகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் . மனதில் நேர்மறை சிந்தனைகள் நிறைந்து இருக்க வேண்டும்.   மனமும் உடலும் இரட்டைப் பிறவிகள் ஒன்றில்லாமல் மற்றொன்று சுகப்படாது.  உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன மகிழ்ச்சி பாதிக்கப்படும் மன மகிழ்ச்சியை பாதிக்கப்பட்டால் உடல் ஆரோக்கியம் கெடும்.  எனவே மனதையும் உடலையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்   உணவ...

செம்பருத்தி பூ டீ

செம்பருத்தி பூ டீ செம்பருத்தி பூக்கள் உடலுக்கு தேவையான அபார சத்துக்கள் நிறைந்தது.  செம்பருத்தி பூக்களை டீயாகவும்,  செம்பருத்தி ஜூஸ் ஆகவும் செம்பருத்திப் பூக்களை காய வைத்து பவுடர் செய்தும் பயன்படுத்தலாம். செம்பருத்தி பூவின் நன்மைகள்  1)தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்தல் நரைத்தால் போன்றவற்றை தடுக்கிறது 2) ரத்த அழுத்தத்தை குறைக்கிறது  3)பல காயங்கள் விரைவில் ஆறுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மருந்தாக உபயோகப்படுகிறது 4) கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது இதனால் தமனிகளில் உள்ளே உள்ள அடைப்புகள் நீங்கி கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது 5) விட்டமின் சி  , இரும்புச்சத்து உள்ளது  6)ஜலதோஷம் இருமலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது  7)குறைந்த ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்களுக்கு அதனை சரி செய்கிறது  8)ஆன்ட்டி ஆக்சிடென்ட் (அந்தோ சயனைடுகள், ஃப்லாவனாய்டுகள், பிளானிக் அமிலம் ஆகிய ஆர என்ற அடடி ஆக்சிடென்ட்கள்) நிறைந்து உள்ளதால் தொற்றுக்களையும் கிருமிகளையும் எதிர்த்து போராடுகிறது  9)வயது மூப்பை தள்ளிப் போடுகிறது  10)இதய நோய் , புற்றுநோய் போன ஆபத்தான நோய்...

பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும்  ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  2) வள்ளுவரும் கற்பும்   தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்  பெய்யெனப் பெய்யும் மழை. " தெய்வத்தை தொழாமல் தன் தலைவனை தொழுகின்றவள், மழையை பெய்யன்றால் பெய்யும்" வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கற்புக்கு இம்மாதிரியான கருத்துக்களை கூறியிருக்க மாட்டார். எந்த பெண்ணரசியாகிலும் தன்னை ஆண் பிறவிக்கு அடிமை என்றாவது, தாம் அப்பிறப்பிக்குக் கீழ்பட்டவர்கள் என்றாவது, ஆண் தன்மையை விட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெண்ணரசி என்று சொல்ல நாம் ஒருகாலும் ஒப்போம். அவ்வையாரின்   "தையல் சொற்கேளேல்" ( பெண்கள் சொல்லை கேட்கக் கூடாது) "பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்"( அறியாமை பெண்களின் ஆபரணம்)   வள்ளுவரின்   "பெண்வழிச் சேரல்" ( பெண்கள் இஷ்டப்படி நடக்கக் கூடாது) பெண்களும் பகுத்தறிவுள்ள, சிந்தனா சக்தி உள்ள மனித ஜீ...