Posts

Showing posts from August, 2025

மகாபாரத கிளைக் கதை -5- சனீஸ்வரன் பெயர் காரணம்

சனீஸ்வரன் பெயர் காரணம்  ஒருமுறை சனி பகவான் தேவலோகத்தை கடந்து கைலாயத்திற்கு வந்து கொண்டிருந்தார் இதை பார்த்த தேவர்கள் சனி பகவான் என்று யாரை பிடிக்கப் போகிறார்கள் என்று அச்சத்துடன் பயந்தனர். தேவலோகத்தை கடந்து சனி பகவான் கைலாயத்துடன் நுழைந்தார் சனி பகவான்.  கைலாயத்துக்குள் வருவதை அறிந்த சிவன் தன்னைத்தான் பிடிக்க வருகிறார் என்று யோகித்துக்கொண்டு வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு குகை மலையில் சென்று குகைக்கு உள்ளே சென்று பகுகையை மூடினார் பின் தவத்தில் ஈடுபட்டார் ஏழரை ஆண்டு காலம் கழித்து வெளியே வந்த போது சனி பகவான் வெளியே காத்திருந்தார்.  பார்த்தாயா உன்னுடைய படியிலிருந்து நான் தப்பித்து விட்டேன் என்று சிவபெருமான் கூறினார் அதற்கு சனி பகவான் ஐயா நான் உங்களை ஏற்கனவே பிடித்து விட்டேன். அதனால் தான் ஏழரை ஆண்டு காலம் இந்த குகையில் உங்கள் மனைவியான பார்வதி தேவியை பார்க்காமல் நீங்கள் தனிமையில் இருந்திருக்கிறீர்கள் என்று தெரிவித்தார் . கடவுள் என்ற பிறகும் நீ உன் பணியை சரியாக செய்திருக்கிறாய் அதனால் இனி என்னுடைய பெயர் உனக்கு உன்னுடைய பெயரோடு சேர்ந்து இருக்கும் சனி என்ற உன்னுடைய பெயரோடு சனீ...

மகாபாரத கிளைக் கதை -4- விதி

விதி சிவபெருமானை ஒரு முறை சந்திக்க எமதர்மராஜா வந்தார் அப்பொழுது வாயிலில் ஒரு சின்ன சிட்டுக்குருவி அமர்ந்திருந்தது.  சிறிது நேரம் அதை உற்று நோக்கி இருந்த எமதர்மராஜா யோசனையுடன் உள்ளே நுழைந்தார்.  இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கழுகு சிட்டுக்குருவியின் மீது எமதர்மராஜாவின் பார்வை விழுந்துவிட்டது. எனவே அதற்கு இறப்பு நிச்சயம் ஏற்பட்டுவிடும் என்று அச்சப்பட்டு அந்த சிட்டுக்குருவி தனது கால்களால் ஏந்திக்கொண்டு வெகுதூரம் உள்ள ஒரு மலைப்பகுதிக்கு சென்று அங்கே ஒரு  மரத்தில் உட்கார வைத்துவிட்டு வந்து விட்டது.  எமதர்மராஜா சிவபெருமானை சந்தித்து விட்டு வெளியே வந்து சிட்டுக்குருவி எங்கே என்று பார்த்தார். அப்போது அந்த கருடன் சிட்டுக்குருவியா தேடுகிறீர்கள் நீங்கள் அதை அழிக்க முடியாது அது வெகு தொலைவுக்கு சென்று விட்டது என்றார் அட முட்டாளே இங்கிருந்து இந்த சிட்டுக்குருவி வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு மரத்தின் அடியில் இருக்கக்கூடிய ஒரு பாம்பினால் மரணம் என்று விதி இருக்கிறதே இது எப்படி இந்த சிட்டு குருவி அவ்வளவு தூரம் பறந்து செல்லும் என்று யோசித்தபடியே இந்த சிட்டுக்குருவியை நான்...

மகாபாரத கிளைக் கதை 3- ராதா அயனை மணத்தல்

ராதா  கிருஷ்ணனை மணக்காமல் அயனை மணந்தார். மூன்னொரு காலத்தில் அயன் என்பவர் விஷ்ணுவை  நோக்கி தவம் இருந்தார் தவத்தை மெச்சி நேரில் அவதரித்த விஷ்ணு, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்.  எனக்கு அடுத்த பிறவியில் லட்சுமி தேவி மனைவியாக வரவேண்டும் என்று கேட்டார்.  அதை விஷ்ணு மறுத்தார் . உடனே அயன் நெருப்பை மூட்டி அதில் நுழைந்தார்.  அயனின் பக்தியை மெச்சிய விஷ்ணு அடுத்த ஜென்மத்தில் லட்சுமி தேவி உனக்கு மனைவியாவாள் என்று வரம் அளித்தார்.  அதனால் தான் ராதா - கிருஷ்ணன் இடையே  அதீத காதலுடன் சில காலம் வாழ்ந்தாலும் பிறகு அயனை திருமணம் செய்ய நேர்ந்தது.

மகாபாரத கிளைக் கதைகள் -2- அங்கதன் பிறந்த கதை

அந்தகன் பிறந்த கதை   சிவன் பார்வதியின் மகன் அந்தகன் பிறந்த கதை.  ஒரு நாள் கைலாயத்தில் சிவன் தியானத்தில் அமர்ந்திருந்த பொழுது பார்வதி பின்பக்கமாக வந்து விளையாட்டாக தனது இரு கைகளால் சிவனின் கண்களை மறைத்தாள்.  சிவன் பார்வதி மகன் அந்தகன் பிறந்த கதை.  ஒரு நாள் கைலாயத்தில் சிவன் தியானத்தில் அமர்ந்திருந்த பொழுது பார்வதி பின்பக்கமாக வந்து விளையாட்டாக ஆனது இரு கைகளால் சிவனின் கண்களை மறைத்தாள்.  சிவனின் வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் சக்தி உடையது  இந்த இரண்டு ஒளிகளும் தடைப்படவே பிரபஞ்சம் முழுவதும் இருண்டது.   சிவபெருமான் ஞானத்தால் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை திறந்து ஒளியை வெளியிட்டார். அந்த ஒளியின் வலி தாங்காமல் பார்வதி தேவியின் கைகள் வேர்த்து வியர்வைத் துளிகள் கீழே விழுந்தது.  அது சிவனின் பார்வதிதேவியின் சக்தியுடன் சேர்ந்து குழந்தையாக உருவெடுத்து அதுவே அந்தகன். சிவன் பார்வதியின் மகன் அந்தகன்  

மகாபாரத கதைகள் -1- சுதர்சன சக்கரம் மற்றும் திரிசூலம்

சுதர்சன சக்கரம் மற்றும் திரிசூலம் உருவான கதை சூரிய தேவன் விஸ்வகர்மாவின் மகள் சாஞ்சாவை திருமணம் செய்தா.ர் அவர்களுக்கு மனு, எமராஜா,யமுனா  என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.  சாஞ்சவால் சூரிய பகவானின் வெப்பத்தை தாங்க இயலாமல் தனது நிழலில் இருந்து சாயா என்ற தன்னை போலவே ஒரு பெண்ணை உருவாக்கி சூரியதேவனிடம் விட்டு சென்றாள் . சூரிய தேவனுக்கும் சாயா விற்கும் நான்கு குழந்தைகள் பிறந்தன. சனிதேவ், தபதி, வத்ரா, சாவர்ணி மற்றும் சாவரணி.  நிழல் தன்னுடைய குழந்தைகளை மிகவும் விரும்பி வளர்த்தாள ஆனால் சாஞ்சாவின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள்.  இதை பிடிக்காத எமதர்மன் தன் தந்தையிடம் முறையிட்டான்.  சூரியதேவன் தனது தியானத்தினால் சாயா ஒரு நிழல் என்பதை கண்டறிந்தான். சாஞ்சா மீது அவருக்கு கோபம் வந்தது . உடனே தனது மாமனார் விஸ்வகர்மாவிடம் சென்றார் அதற்கு விஷ்வகர்மா உங்களுடைய சூடு தாங்காமல் அவள் வெளியேறிவிட்டாள.  நீங்கள் விரும்பினால் உங்கள் வெப்பத்தை என்னால் குறைக்க முடியும் என்று கூறினார் சூரியன் சரி என்றார் விஷ்ணுவின் சுதர்சன சககரமும் சிவபெருமானின் திரிசூலம் உருவாக்கப்பட்டது . அதன் பிறகு...

ராமாயண கிளைக் கதைகள் -2 - .

இராமயணக் கிளைக் கதைகள் - 10  முன்னொரு காலத்தில் மதுரா என்ற பெண் சிவபெருமான் மீது மிகவும் பக்தியாக இருந்தார்.  பக்தி ஒரு கட்டத்தில் காதலாக மாறியது அதனால் கடுமையாக தவம் செய்து உயிரோடு இருக்கும்போதே கைலாயம் செல்லும் சக்தியினை பெற்றாள். மதுரா கைலாயம் வந்தபோது பார்வதிதேவிவெளியே சென்று இருந்தார்.  சிவபெருமான் ஞானத்தில் இருந்தார் சிவனைப் பார்த்த மதுரா என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவரை கட்டி அணைத்தார்.  அப்போது அங்கே வந்த பார்வதி தேவி சிவனே ஒரு பெண் கட்டி அனைத்திருப்பதையும் அவள் மீது திருநீறு பூசப்பட்டிருப்பதையும் பார்த்து அடுத்த ஜென்மத்தில் நீ தவளையாக பூலோகத்தில் பிறப்பாய் என்று சாபம் அளித்தார். தியானத்திலிருந்து கண்விழித்த சிவன் தன் பக்தை சாபம் பெற்றதை கண்டு, பக்தையின் அளவுகடந்த பாசத்தால் நடந்த விபரீதத்தை கண்டு மனம் வருந்தி,  மதுரா வருந்தாதே நீ தவளையாக பிறந்தாலும் 12 வருடம் கழித்து மற்றொரு பிறவி எடுப்பாய். அப்போது என் அம்சம் கொண்ட, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவனை நீ மனப்பாய்.  அவர்தான் ராவணனின் மனைவி மண்டோதரி ( மண்டு என்றால் தவளை என்று அர்த்தம்).

ராமாயண கிளை கதை 1 - வாலி, சுக்ரீவன் பிறப்பு

வாலி - சுக்ரீவன் பிறப்பு. சூரிய பகவானின் தேரோட்டின் பெயர் அருணன் .  இவருக்கு இந்திரலோகத்தில் இருக்கக்கூடிய மேனகாவின் நடனத்தை பார்க்க வேண்டும் என்று ரொம்ப மிகவும் ஆசை.  ஒரு நாள் சூரிய பகவானுக்கு தெரியாமல் இந்திரலோகத்திற்கு செல்கிறார்.  இந்திரலோகத்தில் ஆண்களை உள்ளே விட மாட்டார்கள் என்பதற்காக பெண்ணாக மாறி உள்ளே செல்கிறார்  தன் பெயர் அருணா தேவி என்றும் மேனகாவின் தோழி என்றும் அறிமுகம் செய்கிறார்.  மேனகாவின் நடனத்தை பார்த்து ஆசைதீர ரசிக்கிறார்.  இது தெரியாத இந்திரன் அருணா தேவி மீது காதல் வயப்படுகிறார்.  விளைவு இந்திரன் மூலமாக அருணனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.  வந்த இடத்தில் இப்படி ஆயிற்றே என்று வருத்தப்படுகிறார்.  குழந்தையை மறைத்து வைத்துவிட்டு மறுநாள் சூரிய பகவானின் தேருக்கு தேரோட்டியாக செல்கிறார்.  அதை நினைத்து வருத்தமாக இருந்ததால் இதை கவனித்த சூரிய பகவான் ஏன் வருத்தமாக இருக்கிறாய்  அருணா?  என்று கேட்கிறார்.  சூரிய தேவனின் கேள்விக்கு பொய் சொல்ல முடியாமல் தான் அருணா தேவியாக மாறிய இந்திரலோகத்தில் நடந்ததை தெரிவித்தார்....