சமூக வேலிகள் ****** ஆண் பெண் இருபாலர்களுக்குமென சமூக வேலிகளின் தன்மையில், வேறு வேறு கோணங்களில் முன்வைக்கப்படும் காரணங்களுடன் காணுதல் அவசியம். பெண்களுக்கு வெளிச்சூழல்களில் சுற்றித் திரிதலில் உள்ள கட்டுப்பாடு, ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதன் நோக்கம் – பெண்களின் உடல் ரீதியான தாக்குதலினால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கான, பாதுகாப்பு கவசமாகவும் கருதலாம். மேலும், கற்பு எனும் நெறி, இரு பாலருக்கும் என சொல்லப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதன் உரிய நிதர்சனத்தை புரிந்து பார்த்தோமானால், ஒரு பாலிருக்கான பாதுகாப்பின் வளையமாகவும் கருதப்படுகிறது. இதனையே, எதிர் கோணத்தில் பார்த்தால், பதின் பருவ வயதில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களில் உந்தப்பட்டு, தவறுகளுக்கு ஆட்பட்டு விடும் பெண் மகவுகளுக்கும், அல்லது பாலியல் துன்பங்களுக்கு ஆளாகிவிடும் சிறுமிகளின் ஆழ் நெஞ்சில், தாம் வாழ தகுதியற்றவர்களோ, என ஆழ்மன பாரத்துடன், மனம் எப்போதும் சதுராடிக்கொண்டே இருக...