Posts

Showing posts from November, 2020

மகாபாரத கதாபாத்திரங்கள்-திருஷ்டதியுமனன் முன் ஜென்மம்

திருஷ்டத்யும்னன் முன் ஜென்மம் பாஞ்சால மன்னனான துருபதன் புத்திரகாமி யாகம் என்ற வேள்வியை செய்தான். துருபதனுக்கு துரோணர் உடன் பகை இருந்தது.  துரோணரை கொல்லும் வல்லமை பெற்றவனாக தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று வேள்வியில் வேண்டினான். அதன் மூலம் வலிமை மிக்க இளைஞன் ஒருவன் ஆயுதங்களுடன் தோன்றினான அவனே திருஷ்டத்யுமன் . இவனே முன்ஜன்மத்தில் ஏகலைவனாக பிறந்திருந்தான் அப்போது அவரது குருவான துரோணர், ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சணையாக கேட்டுப் பெற்றார்.   ஏகலைவன் இறக்கும்போது அடுத்த ஜென்மத்தில் துரோணரை கொள்ளும் பிறப்பாய் என கிருஷ்ணர் வரமளித்தார்.  அதன்படி அடுத்த ஜென்மத்தில் துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனாக   பிறப்பெடுத்து குருஷேத்திரப் போரில் துரோணர் கொன்றான்.

மகாபாரத கதாபாத்திரங்கள்- பீஷ்மர் முன் ஜென்மம்

பீஷ்மர் முன் ஜென்மம் காசிபர் - வாசு ( தட்சனின் மகள்) தம்பதிகளின் மகன்கள் அஷ்டவசுக்கள் . அஷ்டவசுக்கள் என்பவர்கள் இயற்கையை நிர்வகிப்பவர்கள்.  அவர்களில் பிரபாசன் என்ற வசு தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மற்ற வசுக்களுடன் சேர்ந்து வசிஷ்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில் வசிஸ்டரால்  மண்ணுலகில் பிறக்க சாபமிட்டார் . மண்ணுலகில் பிறக்கும்போது பிரபாசனுக்கு   மனைவி பாக்கியம் இருக்காது என்றும் சாபமிட்டார். அதன்மூலமாக அஷ்டவசுக்கள் தேவலோக மங்கையான கங்கையை அணுகினர் மற்றவர்களுக்கு மண்ணுலகில் பிறந்தவுடன் சாபவிமோசனம் பெறவும் பிரபாகரனுக்கு மட்டும் மண்ணுலகில் நெடுங்காலம் வாழவும் கங்கையின் மைந்தர்களாக பிறக்க வேண்டிக்கொண்டனர். அதன்படி கங்கை (கணவர் சந்தனு)  தனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் பிறந்தவுடன் ஆற்றில் விட்டார்.  எட்டாவது மகனான தேவவிரதனை  ( பீஷ்மர் )வளர்த்து ஆளாக்கி  அவனது தந்தையான சந்தனு மகாராஜாவிடம ஒப்படைத்தார்.

மகாபாரத கதாபாத்திரங்கள்-ஜரா

ஜரா முன் ஜென்மம்   துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணன் பூலோகத்தில் இந்த அவதாரம் முடியப்போகும் சூழ்நிலையில் தன் இறுதிக்காலத்தை அறிந்து ஒரு நாள் அடர்ந்த காட்டுப் பகுதியில் புதர் அருகில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு வேடன் முயலை துரத்திக் கொண்டு வந்தான் புதர் பகுதியில் இருந்த கிருஷ்ணனின் கால்களை பார்த்து முயல் என்று நினைத்து அம்பெய்தினான். அது கிருஷ்ணனின் வலது காலில் பலமாக தைததது. உடன் அந்த வேடன் கிருஷ்ணரிடம் ஓடி வந்து மன்னிப்பு கோரினான் .அப்பொழுது கிருஷ்ணன் , நான் திரேதயுகத்தில் ராமனாக அவதரித்தபோது வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி கொன்றேன்.  அப்பொழுது வாலி " இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும் என்று கூறி சாபமிட்டான்". அந்த வாலியே இந்த ஜென்மத்தில் ஜராவா பிறந்து என்னை அம்பெய்தி உள்ளாய் என்று கூறினார். இன்றுடன் என்னுடைய இந்த அவதாரத்தின் பூலோக வாழ்வு நிறைவடைகிறது என்று கூறி நீ நீடூழி வாழ்வாயாக என்று வாழ்த்தினார்.

மகாபாரத கதாபாத்திரங்கள்-முன்ஜென்மம், அம்சங்கள்

முன் ஜென்மம்/முற்பிறவி 1) கர்ணனின் முன் ஜென்மம் 2அர்ச்சுனன் முன் ஜென்மம்  3)சிகண்டி முன்ஜென்மம் 4) திருஷ்டதியுமனன் முன் ஜென்மம் 5)திரௌபதி முன் ஜென்மம் 6) ஜரா முன்ஜென்மம்  7) பீஷ்மர் முன்ஜென்மம் 8) திருதராஷ்டிரன் முன்ஜென்மம் அம்சங்கள் 1) யுதிஷ்டிரன்- எமதர்மன் 2) பீமன் - வாயு 3)அர்ஜுனன் - இந்திரன் 4)நகுலன் சகாதேவன்  - அஸ்வினி தேவர்கள் 5)கிருஷ்ணன் - விஷ்ணுவின் அவதாரம் 6)பலராமன்- விஷ்ணுவின் அவதாரம்/ஆதிசேஷன் அவதாரம் 7) துர்வாசர்- உருத்திரன் 8) தத்தாத்ரேயர்- விஷ்ணு/மும்மூர்த்திகள் 9)பதஞ்சலி- ஆதிசேஷன் 10)சந்திரன்- பிரம்மா 11)சத்தியபாமா- பூமாதேவி 12)ருக்மணி- லட்சுமி 13)பிரத்யுமனன்- மன்மதன் 14)ருக்மாவதி- ரதி 15)சுபத்திரை- யோகமாயை 16)அபிமன்யு- சந்திரனின் மகன் 17)விதுரன்- எமதர்மன் 18) அஸ்வத்தாமன் - சிவன்

மகாபாரத கதாபாத்திரங்கள்- சபதங்கள், சாபங்கள், வரங்கள்

சபதங்கள், சாபங்கள், வரங்கள் சபதங்கள் 1) துரோணரின் சபதம 2) பரசுராமரின் சபதம் 3) சகுனியின் சபதம் 4) பாஞ்சாலி சபதம் 5) பீமனின் சபதம் 6)அம்பையின் சபதம் சாபங்கள் 1)கசன் தெய்வானைக்கு அளித்த சாபம் 2) தேவயானி கசனுக்கு அளித்த சாபம் 3)பரீட்சித்து மன்னன் பெற்ற சாபம்  4)கிருஷ்ணனுக்கு காந்தாரி இட்ட சாபம்  5) சகுந்தலைக்கு துர்வாசர் இட்ட சாபம்  6) அர்ச்சுனனுக்கு ஊர்வசி இட்ட  சாபம்  7)கௌதமர் இந்திரனுக்கு அளித்த சாபம்  8)கங்கை சந்தனு பூலோகத்தில் பிறப்பெடுக்க இந்திரன் இட்ட சாபம்  9)யயாதிக்கு சுக்கிராச்சாரியார் இட்ட சாபம்  10)கிண்டமா முனிவர் நளாயினிக்கு இட்ட சாபம் 11)இந்திரனுக்கு துர்வாசர் எப்ப சாபம் 12) ருக்மணிக்கு துருவாசர் இட்ட சாபம் 13) இலாவின் சாபம்  14)கர்ணனுக்கு பூமாதேவி இட்ட சாபம்  15)அஷ்டவசுக்களுக்கு வசிஷ்டர் இட்ட சாபம் 16) மாண்டவ்ய முனிவர் நாளாகி விட்ட சாபம் 17) துர்வாசர் மும்மூர்த்திகளுக்கு இட்ட சாபம் 18) கர்ணனுக்கு பரசுராமர் இட்ட சாபம் 18)கர்ணனுக்கு பிராமணர் இட்ட சாபம் 19) திரௌபதி கடோத்கஜனுக்கு இட்ட சாபம்  20)திரௌபதிக்கு இட்ட சாபம் 21) அர்ஜுனனுக்கு கங்கை இட்ட சாபம் வரங்கள் 1)குந்திக்கு துர்வா

மகாபாரத கதாபாத்திரங்கள் (140)- சனகாதி முனிவர்கள்

சனகாதி முனிவர்கள் பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்கள் சனகாதி முனிவர்கள் ஆவர்  சனகர் சனாநந்தர் ,  சனத்குமாரர் சனத்சுஜாதியர்   இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று பிரம்மா உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூறி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். பிரம்மச்சரிய ஆசிரம வாழ்வை மேற்கொண்டு அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பிவந்தனர். திருதராஷ்டிரனுக்கு   விதுரன் கேட்டுக் கொண்டதற்கிணஙக சனத்குமாரர் பிரம்ம ஞானத்தை போதித்தார். சனகாதி முனிவர்கள் சுக்ராச்சாரியார் (அசுரர்களின் குரு)மற்றும் விருத்திராசூரனுக்கும் (அசுரர்களின் தலைவன்)  உபதேசம் வழங்கினர்

மகாபாரத கதாபாத்திரங்கள் (127)- வைசம்பாயனர்

வைசம்பாயனர் 1)யாரின் சீடன் வேதவியாசர் 2) மகாபாரதம் ஜனமேஜயனுக்கு யார் சொன்னது வேத வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதம். அவரின் சீடரான வைசம்பாயனர்   ஜனமேஜயன் நடத்திய வேள்வியின் போது  வைசம்பாயனரால்  எடுத்து கூறியதாக சொல்லப்படுகிறது வைசம்பாயனர் எடுத்துரைத்த மகாபாரதக் கதையை கேட்ட உத்திரசிரவஸ்  என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான  நைமிசாரண்ய  முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். 3) மகாபாரதத்தின் முதல் பெயர்  ஜெயா பின்னாளில் பாரதம் என்றும் பின்பு மகாபாரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

மகாபாரத கதாபாத்திரங்கள் (118)-சுக்ராச்சாரியார்

சுக்ராச்சாரியார் (அசுரர்களின் குரு) 1)தந்தை தாய் பிருகு   - கியாதி  ( தட்சனின் மகள்) 2)மனைவி துவர்ஜாஸ்வதி 3)சகோதரர்கள் ததா விததா சியவனர் 4)சகோதரி லட்சுமி தேவி (விஷ்ணுவின் மனைவி ) 5)மகள்-மருமகன் தேவயானி --- யயாதி 6)பேரன்கள் யது துர்வது 7) பிரகஸ்பதியின் மகன் கசன்   சுக்ராச்சாரியாரிடம்  சிஷ்யனாக சேர காரணம் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும சிரஞ்சீவினி மந்திரம் கற்பதற்காக 8)அசுர குல தலைவன் விருசபர்வனின் குல குரு சுக்ராச்சாரியார்

நாரதர்(பிரஜாபதி)

நாரதர் (பிரஜாபதி) பிரம்மாவின் மனதிலிருந்து  தோன்றியவர்கள்  சனகாதி முனிவர்கள் ஆவர் சனகர்,  சனந்தனர்,  சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூரி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். பிறகு பிரம்மா தனது உடலின் பாகங்களில் இருந்து 10 பிரஜாபதிகளை படைத்தார். வசிட்டர் மரீசி அத்திரி ஆங்கிரசர் புலஸ்தியர் புலகர் கிரது நாரதர் தட்சன்   பிருகு (பிரம்மாவின்  புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர்)  அவர்களில் ஒருவரான நாரதர் மட்டும் இல்லற வாழ்வில் ஈடுபட மறுத்துவிட்டார். அதனால் பிரம்மா கோபம் கொண்டு  நாரதரை மனிதப்பிறவி எடுத்து 50 பெண்களை திருமணம் செய்து கொண்டு சிற்றின்ப வாழ்வில் வாழ்வாய் என்றும்  அதற்கு அடுத்த பிறவியில் எச்சில் உணவை உண்டாய் என்றும் சபித்தார். அதற்கு நாரத முனிவர் எப்பிறவி எடுத்தாலும் நான் நாராயணனின் பக்தனாக இருந்து நாராயணன் புகழ் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி  ஒரு கந்தர்வ

தட்சன்(பிரஜாபதி)

தட்சன் (பிரஜாபதி) 1)மனைவி  பிரசூதி ( சுயம்புமனு - சத்ருபையின் மகள்) 2)மகள்கள் 60 மகள்கள் 13 பெண்களை காசிபர் மணந்தார  ( மரிசி - கலா தம்பதியரின் மகன் )  27 பெண்களை சோமன் ( சந்திரன் ) மணந்தார (சந்திரனின் வழித்தோன்றல்களே சந்திர வம்சம் என்று அழைக்கப்படுகிறது. கௌரவர்கள் பாண்டவர்கள்) 10 பேரை எமதர்மன் மணந்தார்( சூர்யாவின் மகன்) ஒருவரை ( ரதியை ) மன்மதன் மறந்தார் ஒருவரை( தாட்சாயணியை ) சிவன் மணந்தார் ஒருவரை ( கியாதியை ) பிருகு (பிரஜாபதி மணந்தார) (பிருகுவின் வழித்தோன்றல்கள் ரிஷிக முனிவர் ஜமதக்கனி பரசுராமர் ) மற்றவர்களை மணந்தவர்கள் அரிஷ்டநேமி வாஹுபுத்திரர் ஆக்கியவர் கிரசஷ்வயர் 3)காசிபரை மணந்த பெண்களின் வாரிசுகள் காசிபர்-அதிதி  -ஆதித்யர்கள்-(தேவர்கள்) காசிபர்-திதி - மருத்துக்கள்,தைத்தியர்கள்(அரக்கரக குலத்தின் ஒரு வகை ) ( இரணியன்/இரணியகசிவு,இரண்யாட்சன்) காசிபர் - கத்ரு  --நாகர்கள்--( அனந்தன், வாசுகி, தட்சகன், நகுஷன்,ஆதிசேஷன் வாசுகி ,கார்கோடகன், குளிகன் ,சங்கபாலன், பத்மன் முக்கியமானவர்கள்) காசிபர்-வினதா- கருடப்பறவைகள் ( அருணன் , கருடன் ) காசிபர் - தனு - தானவர்கள்(அரக்கர் குலத்தின் ஒரு வகை)

ஆங்கிரச முனிவர் (பிரஜாபதி)

ஆங்கிரச முனிவர் (பிரஜாபதி) 1) மகன் பிருகஸ்பதி (நவகிரகங்கள் ஒருவர், தேவர்களின் குரு, வியாழன் கிரகம்,இ ராஜகிரகம், நான்கு வேதங்களையும் 60 கலைகளையும் அறிந்தவர்) 2) மருமகள் தாரை 3)பேரன் கசன்

புலஸ்தியர் (பிரஜாபதி)

புலஸ்தியர் (பிரஜாபதி) 1)மனைவி ஆவிருப்பு  ( திரணபிந்துவின் மகள்) 2)மகன்  விஸ்ரவஸ் (விஸ்ரவன்) 3)மருமகள்கள் இலவிதா தேவி ( பரத்வாஜர் மகள்) கைகசி/கேகசி ( கபாலியின் மகள் - அரக்கர் குலம்) 4)பேரன்கள் இலவிதா  மூலம்-  குபேரன்(வைஸ்ரவணன்) கைகசி மூலம்--  இராவணன் கும்பகர்ணன் சூர்ப்பனகை விபீஷணன்

காசிபர்

காசிபர் 1)தந்தை தாய் மரீசி - கலா 2)சகோதரி பூர்ணிமா 3)மனைவிகள் காசிபர்  ,  தட்சன் -- பிரசூதி  தம்பதிகளின் 13 மகள்களை மணநதார்(தட்சன் -பிரஜாபதி) அதிதி திதி கத்ரு வினதா தனு முனி அரிட்டை சுரசை சுரபி தாம்ரா குரோதவசை இரா விஸ்வா 4)மகன்கள் அதிதி  மூலம்-  தேவர்கள் (இந்திரன் , அக்னி , வாமனன் , உபேந்திரன் ,  பூமாதேவி) (உபேந்திரன் விஷ்ணுவின் அம்சம்) திதி  மூலம்--  மருத்துக்கள் ,  தைத்தியர்கள் (அரக்கர் குலத்தின் ஒரு வகை) (இரண்யாட்சன் இரணியன்/இரணியகசிவு) கத்ரு  மூலம்-- 105 நாகப்பாம்பு இனங்கள் (புகழ்பெற்ற நாகப்பாம்பினங்கள அனந்தன் ஆதிசேசன் வாசுகி தட்சகன் கார்கோடகன் தனஞ்செயன் ) வினதா  மூலம்-  கருடன், அருணன் (கருடன் - விஷ்ணுவின் வாகனம், அருணன்- இந்திரனின் தேரோட்டி) சுரசை  மூலம் -- நாகப்பாம்பு அல்லாத பாம்பினங்கள் தனு  மூலம் -  தானவர்கள்  (அரக்கர் குலத்தின் ஒரு வகை) முனி  மூலம்-- அரம்பையர்கள்(அப்சரஸ்கள்) (தேவலோகத்தில் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள்) (புகழ் பெற்ற அப்சரஸ்கள்-- ரம்பை, ஊர்வசி ,மேனகை, திலோத்தமை)  அரிட்டை  மூலம்-- கந்தர்வர்கள் சுரபி  மூலம்-- பசுக்கள்,எருமைகள் வாசு மூலம் - அஷ்ட வசுக்கள்

மரீசி மகரிஷி(பிரஜாபதி)

மரீசி மகரிஷி (பிரஜாபதி) 1) மனைவி கலா 2) மகன் மகள் காசிபர் (மகன்) பூர்ணிமா (மகள்) 3) மருமகள்கள் காசிபர் ,  தட்சன் -- பிரசூதி தம்பதிகளின் 13 மகள்களை மணநதார்(தட்சன் -பிரஜாபதி) அதிதி திதி கத்ரு வினதா தனு முனி அரிட்டை சுரசை சுரபி தாம்ரா குரோதவசை இரா விஸ்வா 4)பேரன்கள் அதிதி மூலம்-  தேவர்கள் (இந்திரன் , அக்னி , வாமனன் , பூமாதேவி) திதி மூலம்-- மருத்துக்கள் , தைத்தியர்கள் (அரக்கர் குலத்தின் ஒரு வகை) (இரண்யாட்சன் இரணியன்/இரணியகசிவு) கத்ரு மூலம்-- 105 நாகப்பாம்பு இனங்கள் (புகழ்பெற்ற நாகப்பாம்பினங்கள ஆதிசேசன் வாசுகி தட்சகன் கார்கோடகன் தனஞ்செயன்) வினதா மூலம்- கருடன், அருணன் (கருடன் - விஷ்ணுவின் வாகனம், அருணன்- இந்திரனின் தேரோட்டி) சுரசை மூலம் -- நாகப்பாம்பு அல்லாத பாம்பினங்கள் தனு மூலம் - தானவர்கள் (அரக்கர் குலத்தின் ஒரு வகை) முனி மூலம்-- அரம்பையர்கள்(அப்சரஸ்கள்) (தேவலோகத்தில் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள்) (புகழ் பெற்ற அப்சரஸ்கள்-- ரம்பை, ஊர்வசி ,மேனகை, திலோத்தமை)  அரிட்டை மூலம்-- கந்தர்வர்கள் சுரபி மூலம்-- பசுக்கள்,எருமைகள்

மகாபாரத கதாபாத்திரங்கள்- பிரஜாபதிகள்

பிரஜாபதிகள் பிரஜாபதி  என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக   படைக்கப்பட்டவர்கள். பிரம்மாவின்  மனதிலிருந்து தோன்றியவர்கள்   சனகாதி முனிவர்கள் ஆவர்  சனகர்,  சனந்தனர்,  சனாதனர், சனத்குமாரர்  என்று நால்வர் பிறந்தனர். இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூரி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். பிறகு பிரம்மா தனது உடலின் பாகங்களில் இருந்து 10 பிரஜாபதிகளை படைத்தார் வசிட்டர் மரீசி அத்திரி ஆங்கிரசர் புலஸ்தியர் புலகர் கிரது நாரதர் தட்சன்   பிருகு (பிரம்மாவின்  புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர்)  

அத்திரி மகரிஷி(பிரஜாபதி)

அத்திரி (பிரஜாபதி) 1) மனைவி அனுசுயா 2) மகன்கள் தத்தாத்ரேயர்   (விஷ்ணுவின் அம்சம், மும்மூர்த்திகளின் அம்சமாகவும் கருதப்படுகிறது) துர்வாசர்   (ஈஸ்வரனின் அம்சம், உருத்திரனின் அம்சமாகவும  கருதப்படுகிறது) பதஞ்சலி (பிரம்மாவின் அம்சம், ஆதிசேஷனின் அம்சமாகவும் கருதப்படுகிறது) சந்திரதேவன் (பார்க்கடலை கடையும் போது பிறந்ததாகவும்கருதப்படுகிறதுப்படுகிறது) சந்திரனின் மகன் புதன் புதனின் மகன் புரூரவன் புரூரவன் மகன் ஆயு ஆயுவின் மகன் நகூஷன் நகூஷனின் மகன் யயாதி யயாதியின் வழித்தோன்றல்களே அ)யாதவர்கள்(பலராமன்,கிருஷ்ணன்) ஆ)யவனர்கள் இ)போஜர்கள்(குந்தி போஜனம்) ஈ)மிலேச்சர்கள் உ)பௌரவர்கள் ( பௌரவ வழித்தோன்றல்களே நிலா மற்றும் குரு வம்சத்தினர்) ( நிலா வம்ச வழிவந்தவர்கள் துருபதன்,கிருபன்,கிருமி) (குரு வமச வழித்தோன்றல்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் )

மகாபாரத கதாபாத்திரங்கள்-அஸ்திரங்கள்

அஸ்திரங்கள் மகாபாரத கதாபாத்திரங்கள் பயன்படுத்திய வலிமை வாய்ந்த ஆயுதங்கள்   காண்டீபம் - அர்ச்சுனனுக்கு   வருணன் அளித்தது பாசுபத அஸ்திரம்  -- அர்ச்சுனனுக்கு சிவபெருமான் அளித்தது அந்தர்தானம் - அர்ச்சுனனுக்கு குபேரன் அளித்தது வஜ்ரதத்ததம் - அர்ச்சுனனுக்கு இந்திரன் அளித்தது அஞ்சலிகம் - கர்ணனை வதம் செய்ய அர்ச்சுனன் பயன்படுத்திய அம்பு  சாரங்கம் - கிருஷ்ணருடைய வில் சுதர்சனம் - கிருஷ்ணர் வைத்திருக்கும் சக்கரத்தின் பெயர் சுதர்சனம் பர்வதாஸ்திரம் - எய்தும் போது கல் மழையை பெய்ய வைக்கக்கூடியது கவுசிகீ -- சகாதேவன் வைத்திருந்த புகழ்பெற்ற வாள்   வைஜயந்தி ---    கடோற்கஜனை வதம் செய்ய கர்ணன் பிரயோகித்த சக்தி ஆயுதம் விஜயா -- கர்ணனின் தெய்வீகமான  விஜயா  வில்லினைை மகாபாரத போரில் பயன்படுத்தவில்லை ( இந்திரன்  தனது விஜயா என்ற சக்திவாய்ந்த வில்லை பரசுராமருக்கு அளித்தார். பரசுராமர்  தனது சீடன்  கர்ணனுக்கு  அளித்தார்)   கோடாரி - பரசுராமர் ( திருமாலின் 6வது அவதாரத்தில் பரசுராமருக்கு போர் கருவியான கோடரியை அளித்தவர் சிவபெருமான் )   ப்ரஸ்வப்னாஸ்திரம்  --    அஷ்டவசுக்களிடம் இருந்து பீஷ்மருக்குக் கிடைத்

மகாபாரத கதாபாத்திரங்கள் (75)- பிருகு முனிவர்

பிருகு முனிவர் பிரஜாபதி சப்த ரிஷிகளில் ஒருவர் 1) மனைவிகள் கியாதி காவியமாதா புலோமா 2)மகன்கள்   ததா  விததா   சுக்ராச்சாரியார் (சுக்ரன்) சியவனர்    3)மகள் பார்கவி(ஸ்ரீ) (லட்சுமி) 4)காலில் கண்ணுடன் பிறந்தவர் பிருகு முனிவர் 5)சிவன் பிரணவப் பொருள் மறக்க காரணமானவர் பிருகு முனிவர்   6)பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பிடுங்கி எடுத்தவர் யார்  விஷ்ணு 7)விஷ்ணு பூலோகத்தில்   பிறக்க சபித்தவர். பிருகு முனிவர் (அதனால் தான் விஷ்ணு பல அவதாரங்கள் ( தசாவதாரம் ) எடுத்து மண்ணில் மனிதனாக வாழ்ந்தார்)  8)பிருகு முனிவர் எழுதிய புத்தகம் பிருகுசம்ஹிதா (ஜோதிடம் பற்றியது) 9) பிருகு முனிவரின் வழித்தோன்றல்கள் சவுனகர் ( சூதபவுராணிகர் புராண கதைகளை உலகிற்கு வழங்கியவர். இந்த புராண கதைகளை கேட்டு உலகிற்கு தந்தவர் சவுனகர் ) மார்கண்டேயர் (பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ சிவபெருமான் அருளினார் ) ரிசிகமுனிவர் ஜமதக்கனி பரசுராமர் ( விஷ்ணுவின் 6வது அவதாரம்) ததீசிமுனிவர் ( விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்டவர்) உதங்கமுனிவர் ( ஜனமேஜய ன்  செய்த சர்ப்பய

மகாபாரத கதாபாத்திரங்கள் (112)- புதன்

புதன் (நவக்கிரகங்களில் ஒன்று) 1)தந்தை தாய்  சந்திரன் --தாரை 2)மனைவி  இலா ( வைஸ்வதமனுவின் மகள்) 3)மகன் மருமகள் புரூரவன் --  ஊர்வசி   4)பேரன்   ஆயு 5) கிளைக்கதை  அ) புதன் தாரை  உறவு( பிரகஸ்பதியின் மனைவி)  ஆ) இலா பிறப்பு

மகாபாரத கதாபாத்திரங்கள் (111)-சந்திரன்

சந்திரன்/சந்திரதேவன் (நவகிரகங்களில் ஒருவர்) (பிரம்மாவின் அம்சமாகவும் கருதப்படுகிறது) 1)பட்டப்பெயர்கள்  சோமன்  சந்திரதேவன் 2)தந்தை தாய் அத்திரி முனிவர் (பிரஜாபதி)-அனுசுயா தேவி (பாற்கடலை கடையும் போது பிறந்ததாகவும் கருதப்படுகிறது) 3)மனைவிகள் 27 நட்சத்திரங்கள் 4)மகன்கள் புதன்   பரிவேடன் 5)மாமனார் தட்சன் (பிரஜாபதி)- பிரசூதி ( சுவயம்புமனு - சத்ருபை தம்பதிகளின் மகள்) 6) தட்சனின் சாபம் தட்சனின் மகள்களான 27 நட்சத்திரங்களையும் சந்திரன் மணந்து கொண்டார். ஆனால் ரோகிணியுடன் மட்டும் அதிக காலங்கள் கழித்ததால் மற்ற மனைவியர்கள் தனது தந்தையான தட்சனிடம் புகார் செய்தனர். அதனால தட்சன் தனது மகள்களை சமமாக நடத்தாத சந்திரனின் அழகு நாளோன்றுக்கு அழிந்து மறைந்து போகட்டும் என சாபமிட்டார். சிவனை வேண்டி சாபவிமோசனம் அடைந்தார் அதுவே சந்திரன் தேய்ந்து அமாவாசையாகும் மீண்டும் வளர்ந்து பௌர்ணமி ஆகும் கருதப்படுகிறது.

மகாபாரத கதாபாத்திரங்கள் (119)- பிரகஸ்பதி

பிரகஸ்பதி ( தேவர்களின் குரு ) 1)நவகிரக அந்தஸ்து நவகிரகங்களில் ஒருவர். வியாழன் இவரின் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது 2)தந்தை ஆங்கிரச முனிவர் (சப்த ரிஷிகளில் ஒருவர்) 3)மனைவி தாரை 4)மகன்  கசன் 5) சஞ்சீவினி மந்திரம் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்று வர தன் மகனான கசனை அசுர குருவான சுக்கிராச்சாரியாரிடம் அனுப்பினார். 6) கிளைக்கதை பிரகஸ்பதியின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும்  மகனாக புதன் பிறத்தல்

மகாபாரத கதாபாத்திரங்கள் (109)- ஊர்வசி

ஊர்வசி (தேவலோக அரம்மையர்களில் ஒருவள்- அப்சரஸ்) 1)கணவன் புருரவன் 2)மகன் ஆயு 3கிளைக்கதைகள் அ)ஊர்வசி புருரவன் மணத்தில் பிரிதல் ஆ)ஊர்வசி பிறப்பு இ) அர்ச்சுனனுக்கு அளித்த சாபம்

மகாபாரத கதாபாத்திரங்கள் (108)- புரூரவன்

புரூரவன் 1)தந்தை தாய் புதன் - இலா ( பிரகஸ்பதியின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்த மகன் புதன்) ( வைவஸ்தமனுவின் மகள் இலா ) 2)மனைவி  ஊர்வசி (தேவலோக அப்சரஸ்) 3) இந்திரன் தந்த பரிசு கேசி என்னும் அரக்கனிடமிருந்து தேவலோக அப்சரஸ் ஆன ஊர்வசியை புருரவன்  காப்பாற்றியதால் இந்திரன் அவளை திருமணம் செய்து கொள்ளும்படி பரிசளித்தான் 4)மகன் ஆயு 5)பேரன் நகூஷன் 6)கிளைக்கதைகள் அ) புருரவன்   ஊர்வசியை மணத்தில் பிரிதல் ஆ) புதன் பிறப்பு இ) இலா பிறப்பு

மகாபாரத கதாபாத்திரங்கள் (110)-யயாதி

யயாதி 1)தந்தை நகூஷன் 2)மனைவிகள் (I) சுக்ராச்சாரியார் மகள் தேவயானி (II) விருசபரனன் மகள் சர்மிஷ்டை 3) மகன்கள் யயாதியின்  முதல் மனைவி  தேவயானிக்கு  பிறந்தவர்கள் யது துர்வசு சர்மிஷ்டை   யயாதியை  ரகசிய திருமணம் செய்து பிறந்த பிள்ளைகள் துருயு அனு புரு 4)யயாதி தேவயானியின்  திருமணத்தின் போது  தோழியாக அனுப்பப்பட்டவர் சர்மிஷ்டை ( தேவயானியின்  தோழி  சர்மிஷ்டை -- அசுர மன்னன்  விருசபர்வனின்  மகள். விருசபர்வனின் குரு சுக்ராச்சாரியார்) 5)யதுவின்  வழித்தோன்றல்கள் ( யாதவர்கள்) கிருஷ்ணன் பலராமன் 6) துர்வசு  வழித்தோன்றல்கள் யவனர்கள் 7) துருயு  வழித்தோன்றல்கள் போஜர்கள்   குந்திபோஜன் ( குந்தியின்  வளர்ப்புத் தந்தை) 8) அனுவின்  வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் 9) புருவின்  வழித்தோன்றல்கள் ( பௌரவர்கள் ) நிலா வம்சம் துருபதன் கிருபாச்சாரியர் கிருபி குரு வம்சம் பிரதிபன் சந்தனு பீஷ்மர் கௌரவர்கள் பாண்டவர்கள் 10)  யயாதிக்கு  வயோதிக தோற்றம் அடைய சாபம் இட்டவர் சுக்ராச்சாரியார் 12) யயாதியின்  முதுமையை தந்தையிடமிருந்து வாங்கிக்கொண்ட யயாதின் மகன் யார். புரு  (சர்மிஷ்டைக்கு  பிறந்தவன் )

மகாபாரத கதாபாத்திரங்கள் (104)-ரேணுகா

ரேணுகா 1)தந்தை பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னன் 2)கணவர் ஜமதக்கனி 3)மாமனார் ரிஷிகமுனி- சத்தியவதி (இவர் வேறு சத்தியவதி) 4)மகன்கள் வசு,  விஸ்வா வசு,  பிருகத்யானு,  பிருத்வான்கண்வர் இராமபத்திரன் ( பரசுராமர் ) (விஷ்ணுவின் 6வது அவதாரம்)   5) ஜமதக்கனி யாரின் வழித்தோன்றல் பிருகு முனிவர்   ( பிரஜாபதி ) 6) கிளைக் கதைகள் அ)மகன் பரசுராமரால்  கொல்லப்படுதல்  ஆ)கணவர் ஜமதக்கனி இறப்பு இ)மகன்  பரசுராமரின்  சபதம் ஈ))  கணவர் ஜமதக்கனி,  மகன் பரசுராமர் பிறப்பு உ)  திருமாலின் 6வது அவதாரம் ரெணுகாவின் மகன் பரசுராமர்

மகாபாரத கதாபாத்திரங்கள் (103)-ஜமதக்கனி

ஜமதக்கனி 1)தந்தை ரிஷிகமுனி- சத்தியவதி (இவர் வேறு சத்தியவதி) 2)மகன்கள் வசு,  விஸ்வா வசு,  பிருகத்யானு,  பிருத்வான்கண்வர் இராமபத்திரன் ( பரசுராமர் ) (விஷ்ணுவின் 6வது அவதாரம்) 3)மனைவி ரேணுகா  ( பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னரின் மகள்) 4)யாரின் வழித்தோன்றல் பிருகு முனிவர்   (பிரஜாபதி) 5) கிளைக் கதைகள் அ)மனைவி  ரேணுகாவை  கொல்ல மகன் பரசுராமரை உத்தரவிடுதல் ஆ)கார்த்தவீரிய அர்ச்சுனனை ஜமதக்கனி மகன் பரசுராமர் வதைத்தல் இ) ஜமதக்கனி இறப்பு ஈ)மகன்  பரசுராமரின்  சபதம் ஊ) ஜமதக்கனி, பரசுராமர் பிறப்பு எ)பிருகு முனிவரே சிவபெருமான் பிரணவப்பொருள் மறக்க காரணமாதல். ஏ) திருமாலின் 6வது அவதாரம் பரசுராமர்  

மகாபாரத கதாபாத்திரங்கள் (102)- துஷ்யந்தன்

துஷ்யந்தன் (தீமையை அழிப்பவன்) 1)தந்தை தாய் இலிலன்-இதந்தரி 1)மனைவி சகுந்தலை 2)மாமனார் விஸ்வாமித்திரர் - மேனகா 3)மகன் சர்வதமனா(பரதன்) இவன் பெயரில் தான் பாரதம் என்றழைக்கப்படுகிறது 4)பேரன் பூமன்யு 5) துஷ்யந்தன் சகுந்தலையின் நினைவுகளை மறந்தவிட வேண்டும் என சபித்தவர் துர்வாசர்

மகாபாரத கதாபாத்திரங்கள் (101)- சகுந்தலை

சகுந்தலை 1)தந்தை தாய் விசுவாமித்திரர் - மேனகா 2)கணவன் துஷ்யந்தன் 3)மகன் பரதன் 4)துஷ்யந்தன் சகுந்தலையின் நினைவுகளை மறந்தவிட வேண்டும் என சபித்தவர் துர்வாசர் 5) சகுந்தலை பிறப்பு விசுவாமித்திரர் (கௌசிகன்) கடும் தவம் புரிந்தார் அவருடைய தவத்தைக் கலைக்க  இந்திரன்  தேவகன்னிகையான  மேனகையை  விசுவாமித்திரர் எதிரில் நடனமாட செய்து அவருடைய தவத்தை கலைக்க ஆணையிட்டார். அவ்வாறாகவே மேனகை நடனமாடினார் .அவளுடைய நடத்தினால் முனிவரின் தவம் கலைந்தது அத்துடன் மேனகையை விசுவாமித்திரர் திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் பிறந்த மகளே  சகுந்தலை  பின்னாளில் அரசன்  துஷ்யந்தனை  அவள் திருமணம் செய்துகொண்டு  பரதன்  என்ற மகனை பெற்றெடுத்தாள் . எனினும்  தன் தவத்தைக் கலைப்பதற்காக விசுவாமித்திரர் மேனகை சபித்தார். பின் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்து உண்ணுதல் மூச்சுவிடுதலையும் குறைத்துக்கொண்டு தவமிருந்தார்.   இந்திரன்  வேறு சில வழிகளிலும் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தார் . பிறகு அவரது தவவலிமையை மெச்சிய  பிரம்மா  கௌசிகருக்கு   பிரம்மரிஷி  எனும் பட்டத்தையும்  விசுவாமித்திர  என்ற பெயரையும் சூட்டுகிறார்.

மகாபாரத கதாபாத்திரங்கள் (100)-யசோதை

யசோதா 1)கணவன் நந்தகோபன் வசிப்பிடம் கோகுலம் 2)வளர்ப்பு மகன் கிருஷ்ணன் 3) பலராமன் , சுபத்திரை , கிருஷ்ணன் ஆகியோர்களை வளர்த்தவர்கள் நந்தகோபன்- யசோதை

மகாபாரத கதாபாத்திரங்கள் (99)-அனிருத்தன்

அனிருத்தன் 1)தந்தை தாய் பிரத்யுமனன் - ருக்மாவதி (( ருக்மணியின் அண்ணன் ருக்மியின் மகள்) 2)தந்தை வழி தாத்தா கிருஷ்ணன் - ருக்மணி 3) மனைவி பானாசூரன் மகள் உஷஸ் (உஷா) 4)இறப்பு கிருஷ்ணரின்   மகனான  சாம்பனை  கருவுற்ற பெண் போல் வேடமிட்டு, தவக்கோலத்தில் இருந்த முனிவர்கள் முன் நிறுத்தி, இக்கர்ப்பிணிக்கு என்ன குழந்தை பிறக்கும் கேட்க, கோபமுற்ற முனிவர்கள், உங்கள் குலத்தை பூண்டோடு அழிக்க வல்ல இரும்பு உலக்கை பெற்றெடுப்பாள் என சாபமிட்டனர். கருவுற்று பெற்ற இரும்பு உலக்கையை யாதவர்கள் பொடியாக்கி துவாரகைக் கடலில் கரைத்தனர். பின்னர் கடற்கரையில் ஒதுங்கிய இரும்புத் துகள்கள், கோரைப்புற்களாக அடர்த்தியாக வளர்ந்து நின்றன. ஒரு சமயம்  கிருதவர்மன்  மற்றும்  சாத்தியகி   தலைமையில் அவ்விடத்தில் கூடிய அனைத்து யாதவர்கள் அளவு மீறி மது அருந்திய போதையில், ஒருவருடன் ஒருவர் வீண் விவாதம் செய்து சண்டையிட்டு கொண்டனர். ஒரு காலகட்டத்தில் இரும்பு ஈட்டிகள் போன்ற கோரப்புற்களால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்ந்தனர். இச்சண்டையில் யாதவ முதியோர்கள், பெண்கள், குழந்தைதள் தவிர  பிரதியும்மனன்  ,சாம்பன்  ,அனிருத்தன், சாத்தியகி ,கிரு

மகாபாரத கதாபாத்திரங்கள்(116)-சர்மிஷ்டை

சர்மிஷ்டை 1)தந்தை அசுர மன்னன் விருசபரனன் 2)கணவன் யயாதி  ( இரண்டாவது மனைவி) 3)மாமனார் நகூஷன் 4) தேவயானியின்  திருமணத்தின் போது  தோழியாக அனுப்பப்பட்டவர் சர்மிஷ்டை ( தேவயானியின்  தோழி  சர்மிஷ்டை -- அசுர மன்னன்  விருசபர்வனின்  மகள். விருசபர்வனின் குரு சுக்ராச்சாரியார் ) 5)மகன்கள் யயாதியின் முதல் மனைவி தேவயானிக்கு பிறந்தவர்கள் யது துர்வசு சர்மிஷ்டை   யயாதியை  ரகசிய திருமணம் செய்து பிறந்த பிள்ளைகள் துருயு அனு புரு 6) யதுவின்  வழித்தோன்றல்கள் ( யாதவர்கள்) கிருஷ்ணன் பலராமன் 7) துர்வசு  வழித்தோன்றல்கள் யவனர்கள் 8) துருயு  வழித்தோன்றல்கள் போஜர்கள்   குந்திபோஜன் ( குந்தியின்  வளர்ப்புத் தந்தை) 9) அனுவின்  வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் 10) புருவின்  வழித்தோன்றல்கள் ( பௌரவர்கள் ) நிலா வம்சம் துருபதன் கிருபாச்சாரியர் கிருபி குரு வம்சம் பிரதீபன் சந்தனு பீஷ்மர் கௌரவர்கள் பாண்டவர்கள் 11) தேவயானி மற்றும் சர்மிஷ்டையின்  கணவன்  யயாதிக்கு  வயோதிக தோற்றம் அடைய சாபம் இட்டவர் சுக்ராச்சாரியார் 12) யயாதியின்  முதுமையை தந்தையிடமிருந்து வாங்கிக்கொண்ட யயாதின் மகன் யார். புரு  (சர்மிஷ்டைக்கு பிறந்தவன் )

மகாபாரத கதாபாத்திரங்கள்(115)-தேவயானி

தேவயானி 1)தந்தை சுக்ராச்சாரியார் (அசுர குல குரு) 2)கணவன் யயாதி 3)மாமனர் நகூஷன் 4) தேவயானியின் திருமணத்தின் போது  தோழியாக அனுப்பப்பட்டவர் சர்மிஷ்டை ( தேவயானியின் தோழி சர்மிஷ்டை -- அசுர மன்னன் விருசபர்வனின் மகள். விருசபர்வனின் குரு சுக்ராச்சாரியார்) 5)மகன்கள் யது துர்வசு விருசபர்வன் மகள் சர்மிஷ்டை,   யயாதியை ரகசிய திருமணம் செய்து பிறந்த பிள்ளைகள் துருயு அனு புரு 6) யதுவின் வழித்தோன்றல்கள் ( யாதவர்கள்) கிருஷ்ணன் பலராமன் 7) துர்வசு வழித்தோன்றல்கள் யவனர்கள் 8) துருயு வழித்தோன்றல்கள் போஜர்கள்   குந்திபோஜன் ( குந்தியின் வளர்ப்புத் தந்தை) 9) அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் 10) புருவின் வழித்தோன்றல்கள் ( பௌரவர்கள் ) நிலா வம்சம் துருபதன் கிருபாச்சாரியர் கிருபி குரு வம்சம் பிரதீபன் சந்தனு பீஷ்மர் கௌரவர்கள் பாண்டவர்கள் 11) தேவயானியின் கணவன் யயாதிக்கு வயோதிக தோற்றம் அடைய சாபம் இட்டவர் சுக்ராச்சாரியார் 12) யயாதியின் முதுமையை தந்தையிடமிருந்து வாங்கிக்கொண்ட யயாதின் மகன் யார். புரு

வாழ்வியல் கலை-குழந்தைகளுடன் பழகுதல்

                                                       குழந்தைகளுடன் பழகுதல்       குழந்தைகள்  நமது லட்சியங்களை நிறைவேற்ற, நமக்குப் பிறந்தவர்கள் என்ற தவறான எண்ணமே, அவர்களின் மீதான பல கனவுகளின் திணிப்பு உருவாகி விடுகிறது.  அவர்கள், நம் மூலம் இப்பூவுலகைக் காண வந்தவர்கள்.  நமது இயலாமையால் வாழ்வில் நிறைவேறாக் கனவுகளை அவர்களின்  தலைமீது பாரமாக இறக்கி வைக்க நினைப்பதன் தாத்பரியம் உணர்தல் அதிஉத்தமம்.                பள்ளிப்பருவத்தில் குழந்தைகள் கற்க வேண்டிய மனிதம், அறம், சுயமரியாதை, நீதி ஆகியவை  போதிக்கப்படுவது நடைபெறுகிறதா? என்றால், அது காலத்தின் வேகத்தால் பல பெற்றோரின் கவனத்தில் இருந்து வெகு தொலைவில் சென்றுவிட்ட ஒன்றாகவே அமைந்து விடுகிறது.  விட்டுக் கொடுத்தல், பகிர்ந்து வாழ்தல், மன்னித்தல், மறத்தல்  ஆகிய பண்புகளை குழந்தைகளுக்கு பெற்றோர் ஊட்டி விட வேண்டும். பள்ளிகளில் பல மொழிகள், பல பாடங்கள் கற்றலின் சுமை கூடியுள்ள சூழ்நிலையில், கட்டாயம் கற்பிக்க வேண்டியவையாக உள்ளதை, பெற்றோர் தனிக்கவனம் செலுத்தி கற்பித்தல் அவர்களின் வாழ்வை  ஆனந்தமாக்கும்.            வெற்றியும், தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்க

மகாபாரத கதாபாத்திரங்கள்(120)- கசன்

கசன் 1)தந்தை பிரகஸ்பதி   2)கசனின் குரு யார் சுக்ராச்சாரியார் (சஞ்சீவினி மந்திரத்தை கற்பதற்காக சிஷ்யனாக சேர்ந்தார்) 3) சஞ்சீவினி மந்திரம் என்றால் என்ன இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரம் 4) சுக்ராச்சாரியார் வயிற்றுக்குள் சென்ற கசனை காப்பாற்றியது யார் சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி சுக்ராச்சாரியார் கசனை காப்பாற்றினார் 5) சுக்ராச்சாரியாரின் வயிற்றி கிழித்துக் கொண்டு கசன் வெளியே வந்த பிறகு சுக்ராச்சாரியாரை காப்பாற்றியது யார் அதே சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி கசன் சுக்ராச்சாரியாரை காப்பாற்றினான் 6) தேவயானிக்கு கசன் அளித்த சாபம் உன் குலத்தில் உன் திருமணம் நடைபெறாது சத்திரியனை மணப்பாய் என சபித்தான். (பிற்காலத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யயாதி யை மணந்தாள்) 7) கசனுக்கு, தேவயானி அளித்த சாபம்  சஞ்சீவினி மந்திரத்தை கசன் பயன்படுத்த முடியாது என சபித்தார். ( தேவயானி  , கசன் மீது காதல் கொண்டாள் அந்த காதலை கசன் மறுத்தான் எனவே இருவரும் சபித்துக் கொண்டனர்) 8) கிளைக் கதை அ) தேவயானி கசன் காதல் மறுப்பு ஆ) கசன் மரணம் -சுக்கிராச்சாரியார் உயிர்ப்பித்தல்

மகாபாரத கதாபாத்திரங்கள் (129)- உக்கிரசேனன்

உக்கிரசேனன் 1) ஆண்ட ஊர் விருதினி இராஜ்ஜியத்தின் அரசன் தலைநகர் மதுராபுரி 2)மனைவி பத்மாவதி 3) மகன் கம்சன் 3) சகோதரன் தேவகன் 4) உக்கிரசேனன் கிருஷ்ணனுக்கு என்ன உறவு தாய் வழி பெரிய தாத்தா 5) உக்கிசேனன் தேவகிக்கு என்ன உறவு உக்கிரசேனனின்   சகோதரன் தேவகனின் மகள் தேவகி தேவகி - வசுதேவரின் மகன்  கிருஷ்ணன் 6) உக்கிரசேனன் தனது மகன் கம்சனால் சிறைபடிக்கப்பட்ட பின் ராஜ்ஜியத்தை மீது தந்தவர் வசுதேவர் தேவகியின் எட்டாவது மகனால் கம்சனுக்கு இறப்பு நேரும் என்று கணிக்கப்பட்டதால்  கம்சன், தேவகியையும் அவளது கணவர்  வசுதேவரையும்  சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில்  கிருட்டிணன்  பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார். தனது தாய் வழி தாத்தா  உக்கிரசேனனுக்கு  ராஜ்யத்தை ஒப்படைத்தார்

மகாபாரத கதாபாத்திரங்கள்(130)-மேனகா

மேனகா 1) இருப்பிடம் தேவலோக அப்சரஸ்களில் ஒருத்தி 2) கணவர் விஸ்வாமித்திரர் 3) மகள் சகுந்தலை 4) மருமகன்-பேரன் துஷ்யந்தன் -மருமகன் பரதன் -பேரன்

திருமாலின் தசாவதாரம் (6)- பரசுராமர் அவதாரம்

திருமாலின் தசாவதாரம் திருமால்    காக்கும் கடவுள் ஆவார். இவர்  உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழச்செய்ய பத்து அவதாரங்களை இந்த பூமியில் எடுக்கின்றார்.  தீமைகளை நீக்கி உலக உயிர்களின் நன்மைக்காகவும் நல்வாழ்விற்காகவும் விஷ்ணு வின்  அவதாரங்களே  திருமாலின் பத்து அவதாரங்கள்  (தசாவதாரம்) என்று அழைக்கப்படுகிறது  6)பரசுராமர் அவதாரம் திருமாலின் 6வது அவதாரம் ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக்  அழிக்க, சபதமேற்ற பரசுராம அவதாரம். ஜமதக்கினி - ரெணுகா தம்பதிகளின் ஐந்து மகன்கள் வசு,  விஸ்வா வசு,  பிருகத்யானு,  பிருத்வான்கண்வர் இராமபத்திரன் ( பரசுராமர் ) . மகிஷ்மதி நகர மன்னன் கிருதவீரியன் பத்மினி தம்பதிகளின் மகனான கார்த்தவீர்ய அர்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்டவன். அனைத்து உலகையும் ஆள விரும்பிய கார்த்தவீரிய அர்ஜுனன் - பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமான தத்தாத்ரேயருக்கு ஆயிரம் ஆண்டுகள் பணிவிடைகள் செய்து அனைத்துலகையும் ஆளும் வரமும்   விஷ்ணு தவிர வேறு எவராலும் மரணம் இல்லை என்ற வரமும விண்ணுலகம் மண்ண

திருமாலின் தசாவதாரம் (5)-வாமன அவதாரம்

வாமன அவதாரம்  இது திருமாலின் ஐந்தாவது அவதாரம். வாமனன் என்றால் குள்ள வடிவானவன் என்பது பொருள். வாமன அவதாரத்தில் சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ உடையுடன் மறு கையில் கமண்டலத்தை பிடித்து இருப்பார் விஷ்ணு . காசிபர் முனிவர்- திதி தம்பதியின் மகனாக பிறந்தவர்கள் தைத்தியர்களான இரணியன்,இரணியாட்சன். அவர்களின் வழித்தோன்றலான மகாபலி சக்கரவர்த்தி அசுர குலத்தில் பிறந்தாலும் மாபெரும் கொடை உள்ளம் கொண்ட வீரன் ஆவார்‌. அவர் மக்களை மிகவும் நேசித்தவர்.  தனது ஆட்சியின் கீழ் மிக செழிப்பாகவும் மக்கள் மிக்க மகிழ்ச்சியாகவும் வாழ வழிவகை செய்தார். மகாபலி இதனால் தனக்குள் பெரும் கர்வம் கொண்டிருந்தான் மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கி அவருக்கு அருள் புரியவும்  அதிதியின் (தேவர்களின் தாய்)வேண்டுதலின் படி தேவர்களைக் காக்கவும் திருமால் எடுத்த அவதாரம வாமன அவதாரம்.  மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் ஆள்வதற்காக செய்யப்பட்ட ராஜசுய யாகத்தில்  கலந்து கொள்ள வந்த வாமனன் மூன்றடி நிலத்தை தானமாக வேண்டும் என மகாபலியிடம் கேட்டான்.   சுக்ராச்சாரியர் (அசுரர்கள் குரு) "வந்திருப்பவன் சாதரணமானவன் அல்ல" விஷ்ணு போல் தெரிகிறது என்

மகாபாரத கதாபாத்திரங்கள்-கிருஷ்ணன், பலராமன் பிறப்பு

கிருஷ்ணன், பலராமன் பிறப்பு மதுராவின் மன்னன்  உக்கிரசேனன் - பத்மாவதி தம்பதிகளின் மகன் கம்சன் . உக்கிரசேனின் சகோதரன் தேவகனின்  மகள் தேவகி . கம்சன் தேவகியின் சகோதரன். தனது சகோதரியான தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தாய்மாமனான கம்சனுக்கு உயிரிழப்பு ஏற்படும் என்று அசரீரி தெரிவித்ததால் கம்சன் தேவகியையும் தேவியின் கணவரான சூரசேனன் மகன் வசுதேவரையும் மதுரா சிறையில் அடைத்தான்.  சிறைச்சாலையில் தேவகிக்கு பிறந்த  குழந்தைகளை  பிறந்தவுடன் கொன்றுவந்தான். வசுதேவர்- தேவகியின் ஏழாவது குழந்தை கருவில் பிறப்பதற்கு முன்பாகவே யோகமாயை உதவியுடன் வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது.  அவ்வாறு பிறந்த குழந்தையே  பலராமன் ஆவார்.  தேவகியின் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தான். வசுதேவர் கிருஷ்ணன் பிறந்த அன்றே யமுனை ஆற்றைக் கடந்து கோகுலத்தில் வாழும் யாதவர் குல தலைவரான தனது நண்பன் நந்தகோபனிடம் குழந்தையை ஒப்படைத்தான். கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தகோபன்- யசோதை தம்பதிகளுக்கு மகனாக வளர்ந்தான்.. கிருஷ்ணன் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாக கருதப்படுகிறது விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக பல

மகாபாரத கதாபாத்திரங்கள்- வேதவியாசர் பிறப்பு

வேதவியாசர் பிறப்பு சத்தியவதி   என்ற  மீனவப்பெண்.(தந்தை-தாய் உபரிசரன் அரசன் -மீன் அப்சரஸ் கன்னி) கங்கைக்கரையிலிருந்து எதிர்க் கரைக்கு படகில் மக்களை ஏற்றியும், எதிர்கரையிலிருப்பவர்களை மறுகரைக்கும் ஏற்றிச் செல்பவள்.  ஒரு நாள் படகில் முனிவர் பராசுரர் பயணம் செய்தார். பாதி பயணத்தின் போது சத்தியவதியிடன் இந்த நல்வேலையில் ஆண் பெண் கூடிப்பிறக்கும் குழந்தை உலகில் மாபெரும் ஞானியாவான் என்றும் அக்குழந்தை உன் மூலம் பிறக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரினார் முதலில் மறுத்த சத்தியவதி பின் 3 வரங்கள் பெற்று ஒப்புக் கொண்டாள் 1) இந்நிகழ்வை யாரும் பார்க்கக்கூடாது. 2) மீண்டும் கன்னித்தன்மை பெற வேண்டும் 3) அவள் மீது வீசும் மீன் வாடை நீங்கி வேண்டும் (மீனுக்கு பிறந்ததால் மீன் வாடை பெற்றாள்)  பராசுரர் சத்தியவதிக்கு அளித்த வரத்தின்படி படகைச் சுற்றி பனிப் படலம் ஏற்படுத்தி யாரும் அறியாமல் தாயாக செய்துப் பின் கன்னித்தன்மை திரும்ப அளித்து அவளிடமிருந்த மீன் வாடையை நீக்கி சுகந்த மணம் வீசுச்செய்தார்.  பராசுரர் தவவலிமையால் படகு எதிர்கரையை அடையும் முன் சத்தியவதிக்கு பராசுரமுனிவருக்கும் பிறந்தவரே  கிருஷ்ண த்வைபாயனன் என்ற வி

மகாபாரத கதாபாத்திரங்கள்- சத்தியவதி பிறப்பு

சத்தியவதி பிறப்பு உபரிசரன்  என்ற அரசன் ஒரு நாள் வேட்டை முடிந்து ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்த போது தன் மனைவின் நினைவுகளோடு இருக்கையில் அவரிடமிருந்து சுக்லம் வெளிபட்டதை ஓர் இலையில் சேகரித்து ஒரு கிளியிடம் கொடுத்து தன் மனைவியிடம் கொடுக்கச் சொன்னான். அதை எடுத்துக் கொண்டு கிளி பறந்த போது கிளியை ஒரு பருந்து தாக்கும்போது, இலையிலிருந்த சுக்லம் கடலில் விழுந்து விட்டது. அதை ஒரு மீன் உண்டு விடுகிறது. அந்த மீன் பிரம்மாவின்  சாபத்தால் மனித குழந்தை பெறும் வரை மீனாக இருக்கும் ஒரு அப்ஸரஸ் கன்னி. சில நாட்களுக்குப் பின்  மீனவர்கள் அந்த மீனை பிடித்தபோது அதன் வயிற்றில்  இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டு மன்னன் உபரிசரனிடம் கொடுத்தனர். ஆண் குழந்தையை எற்றுக் கொண்டு, பெண் குழந்தையை மீனவர்கள் வசம் வளர்க்க கூறிவிட்டார். அந்த மீனவத்தலைவன் சத்தியவதி என்றே அழைத்து வந்தான். அவளிடமிருந்து மீன் வாடை வீசியதால் மத்சகந்தி என்ற பெயரும் அவளுக்கு உண்டு.            ************** மகாபாரத கதாபாத்திரங்களில் வித்தியாசமான முறையில் பிறந்தவர்கள்/இறந்தவர்கள் பற்றிய தகவல்கள்.

மகாபாரத கதாபாத்திரங்கள்- ஜமதக்கனி, பரசுராமர் பிறப்பு

ஜமதக்னி, பரசுராமர் பிறப்பு பிருகுமுனிவரின்  வழித்தோன்றலான ரிசிகமுனி ,  காதி அரசின் மகளான சத்தியவதியை மணக்க விரும்பினார். கடும் அந்தணர் தவ வாழ்வு வாழ்ந்த ரிஷிகமுனியே எங்களது இனத்தில் திருமணத்திற்கு என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. பழுப்பு உடல், கருப்பு காது கொண்ட ஆயிரம் குதிரைகளை நீ தந்தால் என் மகள் சத்தியவதியை உமக்கு மனம் முடித்து தருவேன் என்று காசி அரசன் கூறினார்.   பிருகுவின்  வழிதோன்றலான ரிசிகமுனி, வருணனிடம் வேண்டி பழுப்பு உடல், கருப்பு கொண்ட ஆயிரம் குதிரைகளை பெற்றான்.  கங்கை நதியில் இருந்து 1000 குதிரைகள் எழுந்து வந்தது. காசி கேட்டதுபோல் ஆயிரம் குதிரைகளை அளித்து சத்தியவதியை ரிசிகமுனி மணந்தார் . ஒருமுறை பிருகு முனிவர் இவர்களின் குடிலுக்கு வந்தபோது சத்தியவதியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.  எனக்கும் என் தாய்க்கும் ஒரு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டாள்.   நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்றவேண்டும்.  இந்த குவளையில் உள்ள அரிசி பால் உணவை நீ உண்ண வேண்டும் என்றும் வேறு ஒரு குவளை கொடுத்து உனது தாய் அதை உண்ண வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்.  சத்தியவதியும்

மகாபாரத கதாபாத்திரங்கள்- சிசுபாலன் பிறப்பு

சிசுபாலன் பிறப்பு கிருஷ்ணரின் அத்தை மகன் . . சிசுபாலன்   (சேதி நாட்டு அரசன்)பிறக்கின்ற பொழுது நான்கு கைகளையும் மூன்று கண்களையும் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு அசரீரி இவன் யாருடைய மடியில் வைக்கும் பொழுது அந்த கூடுதலாக உள்ள இரண்டு கைகளும் கூடுதலாக உள்ள கண்ணும் மறைகிறதோ அவனாலேயே இவன் கொல்லப்படுவான் என்று கூறி மறைந்தது.  இதனால் அவரின் தாய் அனைத்து அரசர்கள் இளவரசர்கள் அனைவரையும் அழைத்து சிசுபாலனை அவர்கள் மடியில் வைத்தாள்.  கிருஷ்ணன் மடியில் வைக்கும்பொழுது சிசுபாலனின் கூடுதலாக இருந்த இரண்டு கைகள் கூடுதலாக இருந்த கண்  உதிர்ந்தது  இதனால் கிருஷ்ணனால் தான் இவனுக்கு மரணம் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்ட அவளின் தாய் "என் மகன் எந்த தவறு செய்யினும் நீவீர் பொறுக்க வேண்டும்" என்று வரம் கேட்டாள்.  அதற்கு கிருஷ்ணன் அவனது 100 தவறுகளை பொறுப்பேன் என்று வரமளித்தான்.           ********************* மகாபாரத கதாபாத்திரங்களில் வித்தியாசமான முறையில் பிறந்தவர்கள்/இறந்தவர்கள் பற்றிய தகவல்கள்.

மகாபாரத கதாபாத்திரங்கள்-ஜராசந்தன் பிறப்பு

ஜராசந்தன் பிறப்பு பிருகத்ரதன் மகத நாட்டு மன்னன். உடன் பிறந்த இரண்டு இளவரசிகளை மணந்தான். அவனுக்கு குழந்தை இல்லாததால் சந்திரகௌசிக முனிவரை அணுகி வேண்டினான். அவர் ஒரு மாம்பழத்தை கொடுத்து மனைவிடம் கொடுக்கச் சொன்னார் . அந்த மாம்பழத்தை இரண்டாக பங்கிட்டு இரண்டு மனைவிகளுக்கும் சாப்பிடக் கொடுத்தான். இரு மனைவிகளும் கர்ப்பமுற்றனர்.  இரண்டு மனைவிகளுக்கும் பாதிப்பாதி உருவில் குழந்தைகள் பிறந்தது . அதனால் கோவத்துடன் அந்த பாதி குழந்தைகளை ஊருக்கு வெளியே வீசி விட்டான்.  அந்த வழியாக வந்த ஜரா எனும் ராட்சசி பாதி பாதிகுழந்தைகளாக இருந்ததை எடுத்து இணைத்து உயிர்ப்பித்தாள். அதை பிருகத்ரதனிடம் கொண்டு சேர்த்து அது தனக்கு கிடைத்த கதையையும் சொன்னாள்.  பிறகு அது தன்னுடைய குழந்தை என்பதை உணர்ந்த பிருதத்ரதன்   ஜரா என்ற ராட்சசி நினைவாக ஜராசந்தன் என்று பெயரிட்டான்           *********************** மகாபாரத கதாபாத்திரங்களில் வித்தியாசமான முறையில் பிறந்தவர்கள்/இறந்தவர்கள் பற்றிய தகவல்கள்.

மகாபாரத கதாபாத்திரங்கள்-இலா பிறப்பு

இலா/இலாதேவி பிறப்பு வைவஸ்வதமனுவின் மகனான இலன் ஒருமுறை ஒரு புனித காட்டுப்பகுதியில் செல்கின்ற பொழுது குறிப்பிட்ட இடத்தில் காட்டுப்பகுதியில் உள்நுழையும் போது அவர்கள் பெண்ணாக மாறுவார்கள் என்ற சாபம் இருந்தது.  இதனை அறியாத இலன் அப்பகுதியில் நுழைந்ததால் பெண்ணாக மாறி இலா ஆணான்.  இவளே  சந்திரன் தாரைமின் மகனான புதனை மணந்து புரூரவன் என் குழந்தையை பெற்றெடுத்தாள் வைவஸ்வதமனு தனக்கு பிறந்த பெண் குழந்தையை பெரும் வேள்வி செய்து மித்ரவருண தேவனின் உதவியால்   ஆணாக மாற செய்து அவரை பிரத்யும்மன் என்று பெயரிட்டு தாகவும் ஒரு கதை புராணக்கதை உண்டு இலா பிறப்பு குறித்து பல்வேறு விதமான புராணக்கதைகள் உள்ளன.           ******************* மகாபாரத கதாபாத்திரங்களில் வித்தியாசமான முறையில் பிறந்தவர்கள்/இறந்தவர்கள் பற்றிய தகவல்கள்.

மகாபாரத கதாபாத்திரங்கள்-பரீட்சித்து பிறப்பு

பரீட்சித்து பிறப்பு அர்ஜுனன் - சுபத்திரை ஆகியவர்களின் மகனான அபிமன்யு  குருசேத்திரப் போரில் கொல்லப்பட்டான். அவ்வமையம் அபிமன்யு மனைவியான உத்தரை  ( விராடன் மகள்)  கர்ப்பமாக இருந்தாள். அஸ்வத்தாமன் குருசேத்திரப் போரின் முடிந்த நாளில் பிரம்மாஸ்திரம் ஏவி உத்தரையின் கருவில் இருந்த குழந்தையை அழித்தான். கிருஷ்ணன் தனது தவவலிமையால் அக்குழந்தையை காப்பாற்றினான். அந்த குழந்தையே பரீட்சித்து . கிருஷ்ணன், பாண்டவர்கள் மறைவிற்குப்பின் குரு நாட்டின் அரசனாக பரீட்சித்து விளங்கினான்             ***************** மகாபாரத கதாபாத்திரங்களில் வித்தியாசமான முறையில் பிறந்தவர்கள்/இறந்தவர்கள் பற்றிய தகவல்கள்.

மகாபாரத கதாபாத்திரங்கள்- கௌரவர்கள் பிறப்பு

கௌரவர்கள் பிறப்பு திருதராஷ்டிரன் பிறவியில் கண் தெரியாதவன். காந்தார இளவரசியான சுபலனின் மகளான காந்தாரியை மணந்தான். கணவன் பார்க்காத இப்பூலகை தானும் பார்க்க விரும்பாத காந்தாரி தன்னுடைய கண்களையும் கட்டிக்கொண்டு வாழ்ந்தாள்.  திருதராஷ்டிரனு பிறவிக் குருடு என்பதால் ராஜ்யம் மறுக்கப்பட்டது  எனவே தனது தம்பியான பாண்டுவிற்கு முன் தான் ஒரு  வாரிசை பெற்று ராஜ்யத்திற்கு உரியவனாக்க வேண்டும் என்று எண்ணினான்‌ காந்தாரி கர்ப்பமுற்று 2 ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பிறக்கவில்லை . அதற்குள் பாண்டுவின் மனைவியான குந்திக்கு யுதிஷ்டிரன் பிறந்துவிட்டான். எனவே காந்தாரி ஒரு உலக்கையை கொண்டு தன் வயிற்றில் அடித்துக் கொண்டால் அதனால் அவளுக்கு சதைப்பிண்டம் பிறந்தது. துன்பமுற்ற காந்தாரி வேதவியாசரை அழைத்து தாங்கள் எனக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என்று கூறினீர்களே என்று கேட்டு புலம்பினாள்.  அப்போது வேதவியாசர் அந்த பிண்டங்களை 100 பிரிவுகளாக பிரித்து நெய் குடங்களில் இட்டு வைத்தார் . காந்தாரியின் விருப்பப்படி 101வது குடத்தில் ஒரு பெண் பிறப்பதற்காக இட்டு வைத்தார் . பிறகு முதல் குழந்தையாக துரியோதனனும் இரண்டாவது குழந்த