திருமாலின் தசாவதாரம் (4)--நரசிம்ம அவதாரம்

திருமாலின் அவதாரங்கள்
(தசாவதாரம்)

திருமால்   காக்கும் கடவுள் ஆவார். இவர்  உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழச்செய்ய பத்து அவதாரங்களை இந்த பூமியில் எடுக்கின்றார். 
தீமைகளை நீக்கி உலக உயிர்களின் நன்மைக்காகவும் நல்வாழ்விற்காகவும் விஷ்ணு வின்  அவதாரங்களே திருமாலின் பத்து அவதாரங்கள் (தசாவதாரம்) என்று அழைக்கப்படுகிறது 

நான்காம் அவதாரம்

4)நரசிம்ம அவதாரம்

 கிருதயுகத்தில் நடைபெற்றது. 
காசிபர்-திதி தம்பதிகளின் மகனாக  இரணியகசிபு  /இரணியன்
   (இரண்யாட்சனின் அண்ணன்) என்ற அரக்கன் பிரம்மாவிடம் சாகாவரம் வேண்டி கடும் தவம் புரிந்து பிரம்மா "பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் மரணம் என்பது நிச்சயம் ஆதலால் சாக வரம் தர இயலாது"
வேறு வரம் கேட்குமாறு கூறியதால் இரணியகசிபு தனது மரணம் என்பது 
பகலிலோ இரவிலோ ஆயுதங்களினாலோ உள்ளேயோ வெளியேயோ மனிதர்களோ விலங்குகளோ முனிவர்களோ தேவர்களாலோ ஏற்படக் கூடாது என்ற வரத்தினை பெற்றான்.
பெற்ற வரத்தினால் தனக்கு அழிவில்லை என்ற கர்வத்துடன் அனைவரையும் கொடுமைப்படுத்திக் கொண்டகருந்தான்.
இரணியனின் மகன் பிரகலாதன் விஷணுவின் பக்தன்..
எறவே இரணியன் 
பிரகலாதனை மகனென்று பாராமல் கொல்ல முயன்றான்.
யானை காலில் மிதிபடச்செய்தல் ,விஷப் பாம்புகள் உள்ள அறையில் அடைத்தல் , விஷம் அருந்த செய்தல்
என் பல முயற்சிகளில் விஷ்ணுவின் அருளால் பிரகலாதன் காப்பாற்றப்பட்டார்.

 தனது தங்கை ஹோலி என்பவள் நெருப்பில் மூலம் எரியாமல் இருக்க வரம் பெற்றவள்.

அவள் மடியில் அமரச் செய்து நெருப்பில் செலுத்தினான் .ஆனால் விஷ்ணு அவளை கொன்று பிரகலாதனை காத்தார்.

( இதுவே தற்போது பல மாநிலங்களில் ஹோலிபண்டிகையாக கொண்டாடப்படுகிறது)

இரணியன்   ஒரு நாள் 
அந்தி வேளையில் பிரகலாதனின் உன் இறைவன் எங்கே இருக்கிறார் என்றான் பிரகலாதன் என் இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்றான் .
அதற்கு இரணியண்  தூணை காட்டி இந்த தூணில் உன் கடவுள் இருக்கின்றானா என தன் கையில்  வைத்திருந்த கதாயுதத்தால் அடிக்க அதிலிருந்து திருமால் சிங்கமுகம் மனித உடலுடன் நரசிம்மாராக வெளிவந்தார்.
 இரணியனை 
வாயிற்படியில் வைத்து நகத்தால் வயிற்றை கிழித்து கொன்று உலக மக்களை காத்தார். 

நரசிம்மம் என்றால் 
நரன் - மனிதன் 
சிம்மம் - சிங்கம் என்றும் நரசிம்மமூர்த்தியாக சிங்கத்தலை மற்றும் மனித உடலுடன் அவதரித்தார். 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி