மகாபாரத கதாபாத்திரங்கள்-ஜராசந்தன் பிறப்பு

ஜராசந்தன் பிறப்பு


பிருகத்ரதன் மகத நாட்டு மன்னன்.
உடன் பிறந்த இரண்டு இளவரசிகளை மணந்தான். அவனுக்கு குழந்தை இல்லாததால் சந்திரகௌசிக முனிவரை அணுகி வேண்டினான். அவர் ஒரு மாம்பழத்தை கொடுத்து மனைவிடம் கொடுக்கச் சொன்னார் . அந்த மாம்பழத்தை இரண்டாக பங்கிட்டு இரண்டு மனைவிகளுக்கும் சாப்பிடக் கொடுத்தான். இரு மனைவிகளும் கர்ப்பமுற்றனர்.  இரண்டு மனைவிகளுக்கும் பாதிப்பாதி உருவில் குழந்தைகள் பிறந்தது . அதனால் கோவத்துடன் அந்த பாதி குழந்தைகளை ஊருக்கு வெளியே வீசி விட்டான்.
 அந்த வழியாக வந்த ஜரா எனும் ராட்சசி பாதி பாதிகுழந்தைகளாக இருந்ததை எடுத்து இணைத்து உயிர்ப்பித்தாள். அதை பிருகத்ரதனிடம் கொண்டு சேர்த்து அது தனக்கு கிடைத்த கதையையும் சொன்னாள்.
 பிறகு அது தன்னுடைய குழந்தை என்பதை உணர்ந்த பிருதத்ரதன்  ஜரா என்ற ராட்சசி நினைவாக ஜராசந்தன் என்று பெயரிட்டான்

          ***********************

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி