மகாபாரத கதாபாத்திரங்கள்(117) -சரத்வான்

சரத்வான்
வில் அம்புடன் பிறந்தவர்


கௌதம் முனிவரின் வழித்தோன்றலான
வில் அம்புடன் பிறந்த சரத்வான்
விற்போட்டியில் எவராலும் வெல்லமுடியாத  வீரனாக இருந்தான்.
இதனால் அச்சமுற்ற இந்திரன் அவனை கட்டுப்படுத்த தேவலோக அப்சரஸ் ஜனபதியை (ஜலபதி)திருமணத்தை மறுக்கும் சரத்வானிடம் அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காம உணர்வை எதிர்கொள்கிறான்.
இருப்பினும் அவனிடமிருந்து சுக்லம் வெளிப்பட்டு கீழே நாணல் கற்றையின் மேல் விழுந்து இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள்.
இதனை அறியாத சரத்வான்  தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான்.

பிறந்த குழந்தைகளை விலங்குகள் வளத்துவந்தன. அவ்வழியே வந்து
அக்குழந்தைகளுக்கு
எடுத்துவந்து கிருபன்கிருபி என பெயரிட்டு சந்தனு மகாராஜாவால்  வளக்கப்பட்டார்கள்   

கிருபையோடு (கருணை)   அக்குழந்தைகளை எடுத்து வளர்த்ததால் கிருபன் , கிருமி என பெயர் காரணம்

பின்னாளில் கேள்வியுற்ற சரத்வான் தன் மகன் கிருபருக்கு (கிருபாச்சாரியர்) போர் கலைகள், வில்வித்தை,வேதங்கள், சாத்திரங்கள் மற்றும்  உலக இரகசியங்களை கற்றுக் கொடுக்கிறான். 
இவ்வாறு பல கலைகளிலும் கற்றுத்தேர்ந்த கிருபன் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கும் போர்க்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தார் 






Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி