மகாபாரத கதாபாத்திரங்கள்-தத்தாத்ரேயர் பிறப்பு

தத்தாத்ரேயர் பிறப்பு

 கற்பு நெறியுடன் வாழ்ந்து வரும் அத்திரி மகரிஷியின் மனைவியான  அனுசூயா தேவி மீது மும்மூர்த்திகளின் மனைவிகளும் பொறாமை கொண்டனர்.  அவள் கற்பை சோதனை செய்ய  தமது கணவன்மார்களை கட்டாயப்படுத்தி மாறு வேடத்தில் முனிவர்கள் உருவில் சென்று அவளிடம் பசிக்கு உணவு போடுமாறு கேட்க வைத்தார்கள். அவளும் வந்துள்ள முனிவர்களுக்கு உணவு சமைத்தாள். உணவை பரிமாற்ற வந்தவளிடம் அவர்கள் ஒரு வினோத கோரிக்கையை வைத்தார்கள். அவள் உடலில்  ஆடையின்றி உணவு பறிமாறினால் மட்டுமே சாப்பிடுவோம் எனக் கூறினார்கள். 
சம்மதிக்காமல்
முனிவர்களை பசியோடு அனுப்புவது பாவச்செயலாகும்.
பசியோடு  உள்ள அவர்கள் சாபம் தந்துவிட்டால் என்று யோசித்த அனுசூயா  தேவி தனது கணவனை மனதில் நினைத்து வேண்டினாள். அடுத்த நிமிடமே மும்மூர்த்திகளும் பிறந்த குழந்தைகளாகி விட்டார்கள்.  அந்தக் குழந்தைகளை வாரி எடுத்து உணவளித்தாள். அவள் கணவர்  அத்திரி மகரிஷி திரும்பி வந்தார். நடந்ததைக் கேட்டு அறிந்தார். தனது ஞான திருஷ்டியினால் நடக்கபோவதை அறிந்து கொண்டார். குழந்தைகள் அவளிடம் கொஞ்சி  விளையாடின.
அனுசூயாவை சோதிக்கச் சென்ற தமது கணவன்மார்கள் திரும்பி வராததைக் கண்டு பயந்து போன மும்மூர்த்திகளின் மனைவிகள் நாரதர் மூலம் நடந்ததை அறிந்து கொண்டு அனுசூயாவிடம் சென்று மன்னிப்புக் கோரி தமது கணவர்களை திருப்பித் தருமாறு கேட்டார்கள். அவளும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு  அவள் கணவர்களை மீண்டும் பழைய நிலைக்கு ஆளாக்க தன் கணவனை வேண்டினாள். குழந்தைகள் மறைந்தன. மும்மூர்த்திகளும்  தமது உண்மையான ரூபத்தை அனுசூயா- அத்ரி முனிவர் தம்பதிகளுக்குக் காட்டி இன்னும் சில நாட்களிலேயே விஷ்ணுவானவர் அவர்களுக்கு மகனாகப் பிறப்பார் எனவும், பிறக்க உள்ள குழந்தை மும்மூர்த்திகளின் அவதாரமாக, அவர்கள் சக்தியை உள்ளடக்கி தத்தாத்திரேயர் பிறந்து பூமியில் உள்ள அவல நிலையை ஒழிப்பார் என உறுதி தந்துவிட்டு அவர்களை ஆசிர்வத்தப் பின்னர் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கூறியபடியே அனுசூயா சில காலத்தில் கர்பமுற்று ஒரு குழந்தைக்கு தாயானாள். அவளுக்குப் பிறந்தக் குழந்தையே மனித உருவில் மும்மூர்த்திகளின் அவதாரமாக பூமிக்கு தத்தாத்திரேயராக வந்த விஷ்ணு பகவான் ஆவார்.
விஷ்ணு ஏன் தத்தாத்திரேயராக  அவதரித்தார்? 
விஷ்ணு பகவான் அப்படி பிறந்ததற்கும்  ஒரு காரணம் உண்டு. 
முன்னொரு கஷ்யபு என்ற அசுரர்களின் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் மரணம் அடைந்ததும் அவனுடைய மகன்  அரசன் ஆனான். அப்போது அந்த அசுரர்களுக்கும்  தேவர்களுக்கும் போர் நடந்தது.  பல ஆண்டுகள் நடந்த அந்தப் போரில் கஷ்யபுவின் மகன் இறந்து விட்டான். அந்தப் போரில் இந்திரனும் தேவர்கள் சார்பில் கலந்து கொண்டு இருந்தார்.  அதே நேரத்தில்  சுக்ரா எனும் முனிவர் அசுரர்களுக்கு உதவி வந்தார். அசுரர்கள் தோற்று  ஓடிக் கொண்டு இருந்ததைக் கண்ட சுக்ரா முனிவர்  அசுரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இமயமலைக்குச் சென்று சிவபெருமானை துதித்து வேண்டியவாறு தவம் இருந்தார். ஆகவே சுக்ரா முனிவரின் தவத்தைக் கலைக்க முடியாமல் போன  தேவர்களின் சார்பில் மகாவிஷ்ணு சுக்ரா முனிவரின் தவத்தைக் கலைக்க வேறு வழி இன்றி அவருடைய தாயாரைக் கொன்று விட்டார். அவள் போட்ட கதறலில் இன்னொரு இடத்தில் தவத்தில் இருந்த பிருகு முனிவர் கண் விழித்தார். கண் விழித்த முனிவரினால் ஒரு வலிமையற்ற பெண்ணை விஷ்ணுவானவர்  கொன்றதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.  என்ன இருந்தாலும் மற்றொரு முனிவரின் தாயாரை கொள்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆகவே ஒரு முனிவரின் தவத்தைக் கலைக்க  அவர் தாயாரைக் கொன்ற பாவத்திற்காக விஷ்ணு பல ஜென்மங்களில் தமது தெய்வீகத்தை இழந்து பூமியில்  பிறந்து தனது தோஷத்தைக் களைந்து கொள்ள வேண்டும் என சாபமிட்டார். அதனால்தான் இந்த ஜென்மத்தில் அவர் தத்தாத்திரேயராக பிறக்க வேண்டி இருந்தது.  மும்மூர்த்திகளின் அவதாரமே தத்தாத்திரேயேர் .

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி