ஔவையாரின் பொன்மொழிகள் --புதுமொழியாக

வாழ்வு சிறக்க இவ்வளவு விஷயங்களா?
நமது தமிழ் மூதாட்டி ஒளவையாரின் அதே மொழியல் *புதுமொழி* கற்போம் சிறப்போம் 💐

01) பார்க்கின்ற பயிரும் சிறக்கும்
02) அளவான பாசத்தினால் பிள்ளை சிறக்கும்,
03) கேட்கின் கடனும் வந்து சேர்ந்து சிறக்கும் 
04) கேட்பை தவிர்த்தால் உறவு சிறக்கும்
05) தேடிய செல்வம் சிறக்கும்
06) தெகிட்டும் முன் விருந்து சிறக்கும்
07) ஓதினால் கல்வி சிறக்கும்
08) ஒழுக்க வாழ்வு சிறக்கும்
09) சேருகின்ற உறவு சிறக்கும்
10) சிற்றின்ப ஒழிப்பு பெயரும் சிறக்கும்,.

11) நாடுகின்ற நட்பு சிறக்கும்
12) நயமான சொல் சிறக்கும்
13) கண்டிப்புடனான பிள்ளை வளர்ப்பு சிறக்கும்
14) கடன்படாவிட்டால் வாழ்வு சிறக்கும்
15) பிரிவில்லா வாழ்வில் இன்பம் சிறக்கும்
16) தேவைக்கேற்ற பணத்தால் அமைதி சிறக்கும்
17) சினமில்லா அறமும் சிறக்கும் 
18) சிந்தித்த செயலும் சிறக்கும்
19) சோம்பலில்லா  வளர்ச்சி சிறக்கும்
20) சுயமுள்ள வேலை சிறக்கும்

21) முறையான மோகத்தால் முறைமை சிறக்கும்
22) முறையான உறவும் சிறக்கும்
23) அச்சமில்லா வீரம் சிறக்கும்
24) அறிந்த முடிவு சிறக்கும்
25) உழுகின்ற நிலமும் சிறக்கும்
26)உழைக்கின்ற உடலும்  சிறக்கும்
27) இறைக்கின்ற கிணறும் சிறக்கும்
28) இயற்கையை பாதுகாக்கும் நாடும் சிறக்கும்.
29) இல்லாலுள்ள வம்சம் சிறக்கும்
30) இரக்க மனிதம் சிறக்கும்

31) தோகையில்லா துறவு சிறக்கும்
32) துணையுடனான வாழ்வு சிறக்கும் 
33) ஓய்வுள்ள முதுமை சிறக்கும்
34) ஒழுக்க பெண்டிரால் வாழ்வு சிறக்கும்
35) அளவுடன் ஆசை சிறக்கும்
36) அச்சப்படா வீரம் சிறக்கும்
37) இலக்குள்ள பயணம் சிறக்கும்
38) இச்சையில்லா உள்ளம் சிறக்கும்
39) உண்மையான காதல் சிறக்கும்
40) உணர்வுள்ள இனமும் சிறக்கும்

41) செல்வம் வந்தால் வாழ்வும் சிறக்கும்
42) சொல்பிறழா பெயரும் சிறக்கும்
43) தூண்டிய திரியும் சிறக்கும்
44) தூற்றிப்பேசா உரையும் சிறக்கும்
45) காய்த்து குளுங்கும் மரமும் சிறக்கும்
46) காடு வளர்த்தல் மழையும் சிறக்கும்
47) குறி பிறழா வேட்டை சிறக்கும்
48) குற்றம் பார்க்காத சுற்றம் சிறக்கும்
49) வசிக்கின்ற வீடும் சிறக்கும்
50) செல்வம் வந்தால் எல்லாம் சிறக்கும்

51) தூய்மை மேனி சிறக்கும்
52) வெதுவெதுப்பான  உணவு சிறக்கும்
53) உண்மை அழகும் சிறக்கும்
54) உண்மையுரைத்தால் புகழும் சிறக்கும்
55) துடிப்புள்ள இளமை சிறக்கும்
56) துவளாத வெற்றி சிறக்கும்
57) தூங்கினால்இரவு சிறக்கும்
58) தூங்கா பகல் சிறக்கும்
59) கவனமுள்ள செயலும் சிறக்கும்
60) கருத்திள்ள எழுத்தும் சிறக்கும்

இந்த 60  ஐ யும் அறிந்து கொண்டால்?
நமது வாழ்க்கை வெகுவாக சிறக்கும்.

நமது ஔவையின் அதே மொழி புதுமொழியாக...

டாக்டர் ஏ. விஜயசக்தி
இணைப்பதிவாளர்
கூட்டுறவுத்துறை 
தமிழக அரசு 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி