உடல் மொழிகள்

உடல் மொழிகள்

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நாம் நமது உடலின் மொழியை கவனித்து அதன்படி நடக்க வேண்டும்.

.உடல் மொழிகள்

1) வாந்தி வருவது போல் இருத்தல்

வாந்தி வருவது போல உணர்வை ஏற்படுத்த உடலானது ஜீரணம் செய்ய இயலாத அல்லது கெட்டுப்போன உணவை ( Food poison ), வயிற்றின் உள்ளே இருந்து , புவியீர்ப்பு விசைக்கு எதிராக வெளியே தள்ளுவதற்கு தேவையான Force ஐ கொடுத்து அதற்கான சமிக்ஜையை நமக்கு தெரிவிக்கிறது. இதுவே வாந்தி வருவது போல் இருத்தல்.

சமிக்ஞை கொடுக்கப்பட்ட பிறகு உடனடியாக நாம் அந்த உணவை வாந்தி எடுத்து விட வேண்டும் அதை விடுத்து வாந்தியை நிறுத்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. இதனால் ஜீரணம் செய்ய இயலாத உணவு உடலில் தங்குவது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும்.

2) பசி எடுத்தல் 

பசி என்ற உணர்வு உடல் நமக்கு உணவு வேண்டும் என்று கொடுக்கும் சமிக்கையாகும்.
பசி எடுக்காமல் உணவை உட்கொள்ளுதல் கூடாது நன்கு பசி எடுத்த பிறகு சாப்பிடாமலும் இருக்கக் கூடாது.

3) தலைவலி

உடலுக்கு தேவையான ஓய்வு அளிக்கப்படாத போது தலைவலி பெரும்பாலும் ஏற்படுகிறது.
 தலைவலி வந்த பிறகு உடலுக்கான ஓய்வினை தர வேண்டும் ஓய்வு என்பது படுத்து தூங்குவது மட்டும் அல்ல  சும்மா உட்கார்ந்து இருப்பது.
கண் மூடி சாய்ந்து இருப்பது.

4) பேதி ஆவது

உடல் கழிவுகளை உடனடியாக வெளியேற்ற  மலத்தினை நீர்மை தன்மையாக்கி  வெளியேற்றுவது தான் பேதியாவது.
 உடனடியாக மருந்தகம் சென்று மாத்திரை வாங்கி உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொள்ளும் பொழுது பேதி நின்று உடல் கழிவுகள் வெகு நேரம் பெருங்குடலில் தங்கும் படி இருப்பது உடலுக்கு வியாதியை ஏற்படுத்தும்.

5) தும்மல்

தும்மல் என்பது உடல் கழிவுகளை காற்றின் மூலமாக அதிவேகமாக வெளியேற்ற உடல் முயல்வது தான் தும்மல் ஆகும்.
ஒவ்வாமையின் போது தும்மல் ஏற்படும்.
தும்மல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் மூலமாக உள்ளே இருக்கும் கழிவுகளை வெளியே கொண்டு வந்து போட்டு விடும்.
தும்மலை அடக்கக் கூடாது.

6) தாகம் எடுத்தல்

உடலுக்கு நீர் தேவை ஏற்படும்பொழுது உடல் நமக்கு கொடுக்கும் சமிஞ்சையே தாகம் ஆகும்.
 தாகம் எடுத்தபின் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.

அனைத்து 
உடல் மொழிகளை கவனிப்போம் ஆரோக்கியம் பெறுவோம்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி