நச்சு மனிதர்களை ( Toxic people) சமாளிப்பது எப்படி

நச்சு மனிதர்களை  (Toxic people) கையாள்வது எப்படி?

நம்முடைய புறச் சூழலில் பல நச்சு மனிதர்கள் நம்முடன் பிரயாணிப்பர். சிலர் நெருக்கமான உறவுகளாகக் கூட இருப்பர்.
அப்படி உள்ள உறவுகளை விட்டு விலகவும் முடியாது. எனவே நச்சு மனிதர்களின் குணங்களையும் அவர்களை எப்படி கையாள்வது என்பது பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நிம்மதியாக வாழ இயலும்.

 நச்சு மனிதர்களின் குணங்கள்
1) இவர்கள் வெளியே உள்ளவர்களுக்கு மிக நல்லவர்கள் போன்ற தோற்றத்திலும் உடன் வசிப்பவர்களுக்கு நஞ்சாகும் இருப்பர்

2) அவர்கள் மட்டுமே பேசுவார்கள் எதிராளியின் பேச்சை காது கொடுத்து கேட்கக்கூட மாட்டார்கள்.

3) எளிதில் உணர்ச்சிவசப்படுவர்

4) எதிர்மறை எண்ணங்கள் கொண்டவராக இருப்பர். மேலும் புறம் பேசுபவர்களும் இருப்பர்.

5) இது சரி இது தவறு,  பாவம் புண்ணியம் என்று நமது செயல்களை கணித்துக் கொண்டே இருப்பர்

6) எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடனோ அல்லது ஏதோ உலக சாதனை புரிந்துவிட்ட முகத்துடனோ இருப்பர். 

7) இவர்களோடு இருக்கும்போது நமது மன அமைதி கெடும். இவர்களோடு பேசுவது நமக்கு பிடிக்காது

8) ஒரு காரியத்தை அழுது சாதிப்பதும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவதும் இவர்களின் குணங்களாக இருக்கும்

9) இவர்கள் மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவார்கள்.

இவர்களை கையாள்வது எப்படி?

1)அவர்களின் வார்த்தைகளால் நாம் காயப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

2) அதிக நேரம் அவர்களுடன் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

3) அவர்களோடு பேசும்போது விழிப்புணர்வுடன் பேச வேண்டும். மேலும் அவர்களோடு வாதிடுவதை தவிர்க்க வேண்டும்.

4) மனதளவில் அவர்களின் வார்த்தைகள் செயல்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் அதனை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

5) அவர்கள் நட்சத்திர தன்மையில் இருக்கும் போது அவர்களுடன் பேசுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். 

6) நமக்கு ஒரு நச்சு நபர் இருப்பது போன்று நாமும் சிலருக்கு நச்சு நபராகவும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

7)) உடன் வசிக்கும் நச்சு மனிதர்கள் மீது நிபந்தனை இன்றி அன்பு செலுத்த வேண்டும்

நன்மை தீமை,  இரவு பகல் என்று இருப்பது போல நல்ல மனிதர்கள், நச்சு மனிதர்கள் என்று கலந்து இருப்பது இயற்கையே என்ற புரிதல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி