கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள்

ஆறு அடிப்படை உணர்வுகளில்
கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள்


கோபம்
பயம்
வெறுப்பு
துக்கம் 

எல்லா உணர்வுகளுமே ஏற்படுவது இயற்கையே
அது போதுமான அளவு இருப்பதும் நன்மையே.
ஆனால் உணர்வு உணர்ச்சியாக மாறி பெரிய பாதிப்படையும் விளைவுகள் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

1) கோபம்
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நமக்குள் ஏற்படுவது கோபம் ஆகும்
கோபம் என்ற உணர்வு,
எரிச்சல் அல்லது வெறி போன்ற உணர்ச்சியாக மாறும் .

துன்பம் 

பிறரால் ஏற்படுத்தப்படும் மன வலி.
ஈடுசெய்யக்கூடிய இழப்பினால் ஏற்படுவது துன்பம்.


2) பயம் 

ஏற்படும் அச்ச உணர்வே பயத்தினை ஏற்படுத்தும் 
நெருங்ஙடியை சந்திக்கும் போது மனரீதியான  தூண்டலே பயம்

கவலை

எதிர்கால பற்றிய பயம் ஏற்படுத்துவது கவலை.


3) வெறுப்பு

பொருள், நபர், ,சமூகம் ஆகியவற்றால் 
விருப்பமின்மை காரணமாக தோன்றுவதே வெறுப்பு

4)துக்கம்
ஒருவரின் மரணத்தால்  ஏற்படும் பிரிவினால் ஏற்படும் அடக்கமுடியாத மனவலியே துக்கம்
ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதனால் வரும் மனவலியே துக்கம் 

துயரம் 
ஒன்று கிடைக்காமல் போனால் மனதளவில் ஏற்படுவது  துயரம்.
(துக்கம் துயரமாக மாறும்)

வருத்தம் ( Sadness)
நம்மை சுற்றியுள்ள மனிதர்களின் வார்த்தைகள் , செயல்களால் நம்க்கு  ஒத்துப் போகாத தன்மைகளால் ஏற்படும் உணர்வே வருத்தம்
துயரத்தால் ஏற்படும் மன கொதிப்பே வருத்தம்

சோகம்
பிறரின் நிலை கண்டு நாம் வருந்துவது சோகம்
நிம்மதியின்மையால் சோகம் ஏற்படும்  (வருத்தம் சோகமாக மாறும்)

வேதனை

ஏற்பட்ட வருத்தத்தை மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பதால் ஏற்படுவது வேதனை‌ 
முகவாட்டம்
மனச்சோர்வு
உடல் சோர்வு 

தொடர்ந்து மேற்கண்ட உணர்வுகளை உணர்ச்சியாக மாற்றி தொடர்ந்து அதில் பயணிக்கக் கூடாது.

ஏனென்றால் எந்த உணர்ச்சியில் தொடந்து இருக்கிறோமோ அதை அதிகரிக்கச் செய்வதே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவம் ஆகும்.






Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி