மன உளைச்சலுக்கான காரணங்கள்

மன உளைச்சல்

நாம் வாழ்கையில் மகிழ்ச்சியான மனநிலையுடன் வாழ வேண்டும்.  அப்போதுதான் பிரபஞ்ச ஈர்ப்பு விதி நமக்கு அதே மகிழ்ச்சியான சூழ்நிலைகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும்.  இப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் வாழ்வதை தடை செய்வது நமக்கு ஏற்படும் மன உளைச்சல் ஆகும்.  எனவே மன உளைச்சலை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அதனை கலைந்து விட வேண்டும்.

மன உளைச்சலை ஏற்படுத்தும் காரணிகள்

1) மன தினமின்மை

மன திடம் இல்லாமல் எதற்கெடுத்தாலும். உணர்ச்சி வசப்படும் வர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும்.

2) உடல் உபாதைகள் 

உடல் ஆரோக்கியம் இல்லாமல் உடலின் உறுப்புகளில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருப்பது மனதளவில் தொய்வடை செய்து மன உளைச்சலை ஏற்படுத்தும்.
உடல் மொழிகளை கவனித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் 

3)சரியான புரிதலற்ற  உறவுகளுடன் வசிப்பது.

நம்முடன் வசிக்கும் உறவுகள் தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் , மாமியார் வீட்டு உறவுகள், சம்பந்தி வீட்டு உறவுகள் இவைகளில் நெருக்கமான உறவுகளில் சரியான புரிதல் இருக்க வேண்டும்.  அவ்வாறல்லாமல் புரிதலற்ற உறவுகளுடன் வசிக்கும் போது மன உளைச்சல் ஏற்படும்.

4) பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள்

தினசரி வாழ்வில் நக்கு உணவு, உடை, தங்குமிடம்  ஆகியவை அத்தியவசியத் தேவைகள் ஆகும் . அவைகள் மட்டுமின்றி
குழந்தைகள் படிப்பு செலவினும், குறைந்தபட்ச தேவைக்கான வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை இன்றைய சூழலில் கட்டாயம் இருக்க வேண்டிய நிலை உள்ளது . இவற்றின் தேவை நிறைவேறாமல் உள்ள பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

மேலும் செய்கின்ற தொழில் (அ) வேலையில் வருமானம் குறைவாக இருப்பதும்,  தினசரி நிதித் தேவைகளளை பூர்த்தி செய்ய இயலாமல் இருப்பதும் மன உளைச்சல் ஏற்படுத்தும்.

மேலும்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும் மன உளைச்சல் ஏற்படும்.

5) உணர்வுகளை கையாள தெரியாமல் இருத்தல்.

நமக்கு ஏற்படுகின்ற உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை உடையவை. இவற்றை சரியாக கையாளத் தெரிய வேண்டும்.  உணர்வுகளை சரியாக கையாள தெரியவில்லை என்றால் அவைகள் உணர்ச்சிகளாக மற்றவர்கள் மீது வெளிப்பட்டு விடும். இதுவே அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

6) தாம்பத்யம் சார்ந்த பிரச்சினைகள்

கணவன் மனைவியிடையே தாம்பத்திய உறவு சரியாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றொருவருடைய தாம்பத்யம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து திருப்தியான மனநிலையில் இருக்க வேண்டும் .  அவ்வாறல்லாமல் மீண்டும் மீண்டும் தாம்பத்தியத்தில் திருத்தியின்மை என்பது  மன உளைச்சலை ஏற்படுத்தும்.


7) உழைத்து, ஓய்வு, தூக்கம் இல்லாமை

ஒரு மனிதனுக்கு உடலுக்கு தேவையான உழைப்பு இருக்க வேண்டும். உழைப்பே இல்லாமல் சோம்பேறித்தனமாக இருந்தாலும்,  அதிக உழைப்பில் இருந்தாலும் மன உளைச்சல் ஏற்படும்.

 மேலும் மனிதன் உடலுக்கும் மனதிற்கும்  ஓய்வு என்பது மிக அவசியமாகும்.  இந்த ஓய்வை உடலுக்கும் மனதிற்கும் கொடுக்கவில்லை என்றால் மன உளைச்சல் ஏற்படும்.

 மேலும்  ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மணி நேரம் மனிதன் ஆழ்ந்த தூக்கத்தில் ஈடுபட வேண்டும் அப்படி இல்லாமல் தூக்கமின்மை மன உளைச்சலை ஏற்படுத்தும்.

8) தவறான பழக்கங்கள், தவறான 
நம்பிக்கைகள்

மனிதர்கள் தவறான பழக்கத்தில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் அவர்களுடன்  மகிழ்ச்சியான உறவில் இருக்க முடியாது.  இந்த பழக்கங்களை விட்டு விட சொல்லி அவர்கள் வற்புறுத்திக் கொண்டே  இருப்பார்கள். இந்த பழக்கத்தினால் அவர்கள் பல உறவுகளை இழக்கவும் நேரிடலாம்.
குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவங்களுடன் இருக்க வேண்டி இருக்கும்.  எனவே தவறான பழக்கங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

 மேலும் நம்முடைய மதம் சார்ந்து, இனம் சார்ந்து ,நம் வாழுமிடம் சார்ந்து,  சிறு வயதிலிருந்து காரணம் தெரிவிக்காமல் பல தவறான மூடநம்பிக்கைகளை பின்பற்றிக் கொண்டு வருவோம். இவைகள் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி இருக்காது . இந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி வாழ முடியாமலும் ஏற்கனவே உள்ள அந்த நம்பிக்கைகளின் படி இருக்க முடியாமலும் தவித்து அதுவே மன உளைச்சல் ஏற்படும்.

9) அமைதியான சூழலற்ற குடியிருப்புகள் (அ) அலுவலகங்கள்.

குடியிருக்கும் வீடு எப்பொழுதும் அமைதியாகவும் மகிழ்ச்சியானதாகவும் சிரிப்பொலி கேட்பதாகவும் இருக்க வேண்டும் . எப்போதும் எதாவது பிரச்சனைகளை பெருது படுத்தி, அதை விவாதப் பொருளாக மாற்றி, சண்டையிடும் சூழல் இருந்து கொண்டே இருப்பின் அந்த சூழல் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

 மேலும் அலுவலகங்களிலும் மனநிம்மதியுடன் பணிபுரியும் படி சூழல் அமைந்திருக்க வேண்டும்,  உயர் அலுவலர்களோ அல்லது உடன் பணிபுரிவர்களோ தொடர்ந்து குறை கூறிக் கொண்டே இருப்பினும் பிரச்சினைகளில் உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பின் அந்த சூழ்நிலைகள் மன உளைச்சலை ஏற்படுத்தும்.


நம்முடன் வசிக்கும் சில மனிதர்கள் நச்சு குணங்களுடன் இருப்பார்கள். அவர்களுடன் பயணிக்கும் பொழுது அவர்களின் வார்த்தைகள், செயல்களால் நமக்கு மன உளைச்சல் ஏற்படும். அதனால் நச்சு மனிதர்களை கையாள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இனங்கள் நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.  அதனால் அவைகளை முன்பே கண்டறிந்து சரி செய்து கொண்டால் மன நிம்மதியுடன் சந்தோஷமாக வாழலாம்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி