எதிரிகளை உருவாக்கக் கூடாது

எதிரிகளை உருவாக்கக் கூடாது

நாம் வசிக்கும் இடம், பணிபுரியும் அலுவலகம் , நட்பு வட்டாரங்கள், உறவுகள் போன்றவற்றில் நமக்கும் அவர்களுக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளாலும் பண பிரச்சினைகளாலும் சொத்து பிரச்சினைகளாலும் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும்.

 அப்படி மனஸ்தாபங்கள் ஏற்படும் போது அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று பிரயாணிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து அவர்களை எதிரிகளாக பாவித்து வசை வார்த்தைகளால் திட்டுவதோ, சபிப்பதோ கூடாது.  பழிவாங்கும் உணர்வை மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடாது.  எதிரிகளை உருவாக்காமல் வாழ்வதே ஒரு கலையாகும். 

அவர்களுடன் நாம் பழகும் தன்மையில் சற்று இடைவெளியுடன் நின்று போதுமான அளவு பழகிக் கொள்ள வேண்டும்.

அவர்கள் நம்மை எதிரியாக பார்த்தாலும் நாம் அவர்களை எதிரியாக பார்க்கக்கூடாது.
 தெரியாமல் செய்கிறார்கள் என்ற புரிதல் இருக்க வேண்டும். அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் மனதிற்குள் வாழ்த்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி