எதிர் கால திட்டமிடல்

எதிர் கால திட்டமிடல்

 நம்முடைய எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு இன்றி, தன்னுணர்வற்ற நிலையில் வாழ்க்கை போகின்ற போக்கில் அப்படியே விட்டுவிட்டால் பெரிய முன்னேற்றங்களை காண இயலாது. இதில் எதிர்மறையாளர்களின் வாழ்க்கை பல சிக்கல்களுக்கு ஆளாகி திணரும் நிலை ஏற்படும். எனவே திட்டமிட்டு சிந்திப்பதன் மூலமாக வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியங்களை அடைய முடியும்.

நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்        ---------புத்தர்.

திட்டமிடுதலில் 
தினசரி திட்டங்கள் 
மாதாந்திர திட்டங்கள் 
வருடத் திட்டங்கள் 
என்று  பிரித்து செயல்படுத்த  வேண்டும்.

தினசரி திட்டங்கள்

தினமும் காலை எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
 வீட்டில் உள்ள பணிகளை என்னென்ன செய்ய வேண்டும்?
 அலுவலகம் சார்ந்த பணிகளில் என்னென்ன செய்ய வேண்டும்? தொழில் சார்ந்த பணிகளில் என்ன செய்ய வேண்டும்?
 குடும்பத்திற்கான பணிகள் என்ன என்ன செய்ய வேண்டும்? 
உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் என்ன செய்ய வேண்டும்?
என்று தினசரி முன்கூட்டியே திட்டமிட்டு எழுதி வைத்து அதை தினசரி நிறைவேற்ற வேண்டும்.

உதாரணமாக
இன்று மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்
இன்று வாக்கிங் போக வேண்டும்
இன்று அலுவலகத்தில் 15 கோப்புகள் பார்த்துவிட வேண்டும்
இன்று தொழில் தொடர்பாக இரண்டு நபர்களை சந்திக்க வேண்டும்
இன்று உறங்கும் முன் எதிர் காலம் பற்றிய கனவு காண வேண்டும்

நமது நீண்ட கால லட்சியத்திற்கு தினசரி திட்டம் வழி வகுக்க வேண்டும்
இப்படி எழுதி வைத்து அதை தினம் தினம் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

மாதாந்திர திட்டங்கள்

மாதாந்திர திட்டத்திங்களிலும்  நமது எதிர்கால இலட்சியத்திற்கு  தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு நமது தினசரி திட்டங்களில் என்ன என்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என திட்டமிட வேண்டும்.
இலட்சியம் தொடர்பான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்


உதாரணமாக
நம்முடைய எதிர்கால லட்சியம் ஒரு விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்று இருந்தால் அவர் தன்னுடைய தினசரி திட்டத்தில் தினமும் அந்த விளையாட்டுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டம் இடம் பெற வேண்டும்.
 மேலும் மாதாந்திர திட்டத்தில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகள், போட்டிகளில் பங்கேற்பது போன்ற திட்டங்கள் இருக்க வேண்டும்.

வருடாந்திர திட்டங்கள்.

வருடாந்திர திட்டத்தில் நமது லட்சியத்தினை நெருங்குவதற்கான வழிகளை திட்டங்களாக ஆக வகுக்க வேண்டும்.

ஐந்து வருடங்கள் கழித்து என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்
 பத்து வருடங்கள் கழித்து என் வாழ்க்கையில் என்ன என்ன இருக்கும் என்பது பற்றிய தொலைநோக்கு பார்வையை திட்டமிட வேண்டும்.


உதாரணமாக

விளையாட்டு வீரனாக வேண்டும்
சொந்த வீடு கட்ட வேண்டும்
கார் வாங்க வேண்டும்

வருடாந்திர திட்டத்தில் நமது இலக்கான விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்பதை நோக்கி செயல் வடிவம் படுத்த வேண்டும், அதற்காக தொடர்புடைய நபர்களை சந்திக்க வேண்டும். பல இடங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்ய வேண்டும்.

திட்டமிட்டு வாழ்க்கையை அணுகும் பட்சத்தில் அது நமது லட்சியங்களை நிறைவேற்றுகிறது.




Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி