கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள்

கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள் 

A) கோவம்
B) கவலை
C) வருத்தம் 
D) வெறுப்பு 
E) பொறாமை 
F) குற்ற உணர்வு 
G) சுய வதை
H) பாதிக்கப்பட்டவராக உணர்தல் 
I)  துக்கம் 
J)  துயரம்
K)  பயம்
L) சந்தேகம் 
M) புலம்பல்
N) குறை கூறல் 
O) புறம் பேசுதல் 
Q) அவமதித்தல்

போன்ற உணர்வுகள் என்பது உணர்ச்சியாக பிறப்பெடுத்தால் கெட்டவற்றை ஈர்த்துவந்து சேர்த்து விடும்.

"நாம் எந்த உணர்ச்சியால் சூழப்பட்டுள்ளோமோ அதே உணர்ச்சியை அதிகரிக்க செய்வதே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவம்" 

அதனால் கெட்டதை ஈர்க்கும் உணர்வுவை உணர்ச்சியாக மாறாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


எவ்வாறு கெட்டவற்றை ஈர்க்கும் உணர்வை  உணர்ச்சியாக மாறாமல் எப்படி இருப்பது??

உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டது என்ற புரிதல் வேண்டும்.

1) கோவம்.
கோவம் நமக்குள் தோன்றினால் அது உணர்வு. அது மற்றவர் மீது வெளிப்படுத்தும் போது அது உணர்ச்சியாக மாறிவிடும்.

அதை வெளிப்படுத்தாமல் வேறு நல்லதை ஈர்த்துவந்து உணர்வாக மாற்றிவிட வேண்டும்.

கோபம் என்பது மற்றவர் செய்யும் தவறுகளால் நமக்கு ஏற்படும் உணர்வு ஆகும். அது அவர்களின் நிலை நாம் ஏன் கோவப்பட்டு நமக்கு தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும் என்ற  புரிதல் இருப்பின் அவர்கள் அவர்களை சரி செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் அளவு பக்குவம் உள்ளதற்கு இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள்
கோவம் என்ற உணர்வு நன்றியுணர்வு என்ற உணர்வாக மாறிவிடும்..

கோவம் மற்றவர்களை நமக்கு எதிரியாக்கிவிடும் தன்மை கொண்டது என்ற புரிதல் வேண்டும்.

2) கவலை

நமக்கு ஏற்படும் கவலை என்ற உணர்வு நிகழ்வின் தன்மைக்கு ஏற்ப, அதன் மறையும் நேரம் அமையும்.

மறையும் தன்மை கொண்ட உணர்வுக்கு அடிமையாகி அதை பல காலம்   தூக்கி சுமந்து கொண்டு வரக்கூடாது.

ஏற்பட்டுள்ள கவலை உணர்வில் இருந்து.  சுய விழிப்புணர்வு கொண்டு எவ்வளவு 
சீக்கிரம் விடுபட்டமுடியுமோ விடுப்மட்டுவிட வேண்டும் . 

3) வருத்தம்

நம்மைப் பற்றி மற்றவர்கள் வெளியிடும் உணர்வுகளால் வருத்தம் ஏற்படுவது இயல்பு..
புறம் பேசுபவர்களின் வார்த்தைகளால் கூட வருத்தம் ஏற்படும்.

அவர்களின் உணர்வால் நாம் எவ்வளவு காலம் வருத்த நிலையில் இருக்க வேண்டும் என்று முடி வெடுத்துவிட வேண்டும்.

அடுத்தவர்கள் வார்த்தைகளை மலையை பார்த்து நாய் குலைத்தால் மலைக்கு பாதிப்பில்லை என்ற நிலையில் யோசிக்க வேண்டும்.

நம்மைப் பற்றி மற்றவர்கள் சரியாக கணிக்க வேண்டும் என்று நினைப்பதோ, அவர்கள் நம்மைப்பற்றி எப்போதும் சரியாக பேச வேண்டும் என்று நினைப்பு நமது அறியாமையும்.



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி