கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

தூங்கும் போது வருவது கனவல்ல,  உன்னை எது தூங்க விடாமல் செய்கிறதோ அதுவே கனவு.
-------டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

வாழ்க்கையில் இலட்சியங்களை பொருத்தி அதனை அடைவதற்காக,  இலட்சியங்கள் தொடர்பான நாம் காணும் பட காட்சிகளே ( visualisation)  கனவுகள் ஆகும்.

நாம் அடைய வேண்டிய இலட்சியத்தை, நம் ஆசைகளை, அடைந்து விட்ட பிறகு எப்படி இருக்கும் என்பதை படக்காட்சிகளாக கனவு காண வேண்டும் என்பதே கனவு காணுங்கள் என்ற இந்த தலைப்பின் பொருளாகும்.

 அவ்வாறு தொடர்ந்து நாம் கனவு கண்டால் அதற்கு பொருத்தமான வற்றை பிரபஞ்ச ஈர்ப்பு விதி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடும் என்பதே ஆகும்.

எப்படி கனவு காண்பது??

வீடு கட்டுவது தான் எனது கனவு என்று என்றால் வீடு முழுக்க முடிந்து கிரகப்பிரவேசம் நடக்கும் பொழுது வீட்டிற்குள் நாம் எப்படி முதல் அடி எடுத்து வைப்போம் என்பதை கனவாக காணலாம்.  அனைவரையும் அழைப்பிதழ் வைத்து அழைத்தாகிவிட்டது . அனைவரும் காலையில் வந்து விட்டனர்.  அனைவருக்கும் பால் காட்சி கொடுக்கப்பட்டுள்ளது. வீடு முழுக்க அலங்காரமாக செய்யப்பட்டுள்ளது. வீட்டில் பூஜை நடந்தது அனைத்து உறவினர்களும் வந்து மகிழ்ச்சியாக வாழ்த்தியது, பரிசுத்தொழில், வழங்கியது, வீடு நாம் நினைத்தது போல் அழகாக அமைந்துள்ளது.  நாம் நினைத்தபடி வெள்ளை நிற டைல்ஸ் போடப்பட்டுள்ளது. வீட்டிற்குள் படிக்கட்டு அமைந்துள்ளது இப்படி அனைத்தையும் தினமும் கற்பனை செய்ய வேண்டும்.

செய்யப்படும் கற்பனை நிரந்தரமாக நடந்து விடும் இதுவே ஈர்ப்பு விதியின் தத்துவம் ஆகும்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி