குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு.

1)குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலையாகும். குழந்தைகள் நம் மூலமாக இவ்வுலகில் ஜனித்தவர்களே தவிர நமது அடிமைகள் அல்ல.

 2)குழந்தைகளுக்கும் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் இருக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும் அவற்றை மதிக்க வேண்டும்.

3) பதின் பருவ குழந்தைகளுக்கு ஏற்படும் காதல் உணர்வுகள் வயதின் காரணமாக ஏற்படுகிறது என்பதை பெற்றோர் உணர வேண்டும். அவ்வாறு காதலில் உணர்வு ஏற்பட்ட குழந்தைகளை பத்திரமாக கையாள வேண்டும். முள்ளின் மீது பட்ட சேலையை எடுப்பதற்கு எவ்வளவு கவனம் தேவையோ அந்த அளவு கவனத்தை குழந்தைகளின் காதல் உணர்வுகளால் அவர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு பெற்றோர் செயல்பட வேண்டும்.

4) குழந்தைகளை அக்கறையுடனும் பாசத்துடனும் தேவையான அளவு கண்டிப்புடனும் வளர்க்க வேண்டும்.
பதின்பருவ குழந்தைகளின் மீது காண்பிக்கப்படும் 
அதிக அக்கறையும் ஆபத்து ஆகும்.

5)குழந்தைகள் அவமானப்படும் அளவிற்கு வார்த்தைகளை பயன்படுத்தி அவர்கள் மனம் காயப்படும் அளவிற்கு நடந்து கொள்ளக் கூடாது.

6) குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன நல்ல விஷயங்களையும் பாராட்ட வேண்டும் குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை காயப்படுத்தாமல் பாசம் காட்டி புரிய வைக்க வேண்டும். அவர்களே நம்மிடம் அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை நம்மிடம் சொல்லும் அளவு நெருக்கம் காட்ட வேண்டும்.
நெருக்கம் காட்டுகிறேன் என்று அவர்களின் எல்லைக்குள் நுழையக் கூடாது.

7)  எல்லா விஷயங்களும் வாழ்வில் நமக்கு சாதகமானதாக நடந்து விடாது என்பதையும்  தோல்விகளும் வெற்றிகளும் மாறி மாறி வருவதே வாழ்க்கை என்பதே புரிய வைக்க வேண்டும்..

8)நல்ல எண்ணங்களையும் மகிழ்ச்சியான மனநிலையும் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை புரிய வைக்க வேண்டும்.

9) நீ சாதிக்க பிறந்தவன் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

10) குழந்தைகள் பெரும் மதிப்பெண்களை வைத்து அவர்களின் திறமைகளை எடை போடக்கூடாது. அவர்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசக்கூடாது.

11) நீ எனக்கு குழந்தையாக பிறந்ததற்கு எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே"
என்ற புலமைப்பித்தனின் வரிகள் நமக்கு பெற்றோரின் வளர்ப்பு குறித்து தெளிவாக சொல்கிறது.  நம் குழந்தைகள் தான் எதிர்கால தூண்கள். எனவே அவர்களை நல்லொழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோருடைய கடமையாகும்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி