உணர்வுகள் உணர்ச்சிகள் வேறுபாடு

உணர்வுகள் உணர்ச்சிகள் வேறுபாடு

1)நமக்குள் இருக்கின்ற சிறு வயது பதிவுகள், நாம் பின்பற்றுகின்ற மத நம்பிக்கைகளால் கொடுக்கப்பட்டுள்ள பதிவுகள், நமது புறச்சூழல்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்  ஆகியவைகளின் தாக்கமே நமது இயல்பாக இருக்கும்.

2)நமது இயல்பிலிருந்து விலகும் போது நமக்கு ஏற்படுவது உணர்வு.  நாம் அதை மற்றவர்கள் மீது வெளிப்படுத்துவது உணர்ச்சி .

3)உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டது என்ற புரிதல் இருப்பின் உணர்வு என்பது உணர்ச்சியாக மாறாமல் பார்த்துக் கொள்ளலாம்.  

4) உணர்வு என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்காது, அதை கட்டுப்படுத்தவும் தேவையில்லை. 
உணர்ச்சி என்பது நமது  கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் 

5) உணர்வு என்பது நமக்குள் இருப்பது உணர்ச்சி என்பது நம்மில் இருந்து மற்றவர்கள் மீது வெளிப்படுவது.

உதாரணமாக

கோவம் என்ற உணர்வு மற்றவர் செய்யும் விஷயம் நமது இயல்புக்கு எதிராக இருப்பின் நம்மில்  தோன்றிவது.

அதை நாம் வெளிப்படுத்தாமலோ, கோவ உணர்வை வேறு உணர்வாக மாற்றியோ, கடந்துவிடவும் முடியும் .
அவ்வாறல்லாமல் கோவத்தை அதற்கு காரணமான நபரை திட்டியோ, அடித்தோ , புறம் பேசியோ வெளிப்படுத்துவது கோவ உணர்ச்சி ஆகும்.



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி