சுய விழிப்புணர்வு ( Self Awareness)

சுய விழிப்புணர்வு ( Self Awareness)

நாம் பொதுவாக ஆரோக்கியத்திற்காக உணவு உட்கொள்வதில் அதிக அக்கறை கொள்வோம்.  ஆனால் மனம்  சிந்திப்பதில் நம் எண்ணங்களை பற்றி நாம் பெரியதாக கவலைப்படுவதில்லை.  நம் எண்ணங்கள், சிந்தனைகள், வார்த்தைகள், உணர்ச்சிகள் இவைகளை கவனித்து சரி செய்து கொள்வதே சுய விழிப்புணர்வு ஆகும்

1)நம் நடத்தை, நம் செயல்கள், நம் எண்ணங்கள், நம் உணர்வுகள், நம் உணர்ச்சிகள் ஆகியவற்றை புரிந்து கொள்வது தான்  சுய விழிப்புணர்வு .  வாழ்வில் முன்னேற சுய விழிப்புணர்வு அவசியம் தேவை.

2) தவறான நடத்தைகள், செயல்கள், எண்ணங்களை நாம் மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் 

3)தானியங்கி எண்ணங்கள் எதிர்மறையாக தான் இருக்கும் திட்டமிட்டு நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும் எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறை உணர்ச்சிகளுக்கு வழி வகுத்து விடும்

 4)எந்த உணர்வுகளுக்கும்  அடிமையாகாமல் வேறு நபரை போல் நம்மை நாம் பார்த்து கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளை ஆழ்மனதில் நுழைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

 5)எதையும் நிதானமாக சிந்திக்க பழக வேண்டும். தன்னுணர்வற்ற நிலையில் நம்  உணர்ச்சிகள் மேலோங்க விடக்கூடாது.

வாழ்வில் இலக்கை அடையவும் வெற்றி பெறவும் சுய விழிப்புணர்வு தேவை.
சுய விழிப்புணர்வோடு நம்முடைய எண்ணங்கள் சிந்தனை வார்த்தைகள் உணர்ச்சிகள் அனைத்தும் நேர்மறையாக வைத்து பிரயாணிக்க வேண்டும்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி