நல்ல பழக்கங்கள்

நல்ல பழக்கங்கள்

உடல் சார்ந்த சில நல்ல பழக்கங்கள்

  1. காலை எழுவது, காலைக்கடன் கழிப்பது, குளியல், ஆயில் புல்லிங்
  2. தியானம்,மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி செய்தல்
  3. உடலையும் மனதையும் கெடுக்கும் விஷயங்களை பழக்கமாக்கிக் கொள்ளாமல் இருத்தல்.
  4. பசிக்கும் போது ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், தாகம் எடுக்கும் போது முழுமையாக நீர் அருந்துதல். ( பெரும்பாலான நேரங்களில் வீட்டில் சமைத்த உணவை உட் கொள்ளுதல்)
  5. குடும்பம் அலுவலகம் சார்ந்த கடமைகளை செய்தல்.
  6. குடும்பத்தினருடன் சிரித்து பேசி மகிழ்தல், ஒன்றாக இரவு உணவு அருந்துதல்.
  7. உறக்க செல்ல 2 மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்தல்

மனம் சார்ந்த சில நல்ல பழக்கங்கள்

  1. நேர்மறை எண்ணங்கள் நேர்மறை சிந்தனை நேர்மறை வார்த்தைகளை பயன்படுத்துதல்.
  2. எண்ணம் சொல் செயல் ஒரே நேர்கோட்டில் இருத்தல்
  3. நல்லவற்றை ஈர்க்கும் உணர்வுகள் அதிக நேரம் இருத்தல்
  4. கெட்டவற்றை ஈர்க்கும் உணர்வுகளில் இருந்து உடனடியாக வெளியேறுதல்
  5. உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டது. எனவே எல்லா உண்மைகளையும் உணர்ச்சிகளாக மாற்றாம் இருத்தல்.
  6. மற்றவர்கள் மீது பொறாமை, புறம் பேசுதல், போன்றவற்றால் எந்த நன்மையும் விளையாது என்ற ஆழ்ந்த புரிதல் இருத்தல்
  7. இலட்சியத்துடன் பிரயாணித்தல்
  8. காலை எழுந்தவுடன், இரவு உறக்கம் முன் - கடைசியாக நமது கனவு , இலட்சியம தொடர்பாக கனவு காணுதல் ( visualisation)
  9. சுயமதிப்பு அதிகரிக்கச் செய்தல்
  10. சுய விழிப்புணர்வுடன் வாழ்தல்
  11. தேவையான இடங்களில் No சொல்ல பழகுதல்
  12. தைரியம் தன்னம்பிக்கையும் இருத்தல்.
  13. எதையும் தாங்கும் எதையும் சமாளிக்கும் மனதிடத்துடன் இருத்தல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி