ஆண் பெண் ஈர்ப்பு இயற்கை

ஆண் பெண் ஈர்ப்பு இயற்கை 

ஆண் பெண் இருவருக்கும் இயற்கையான ஈர்ப்பு உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த ஈர்ப்புகள் இருப்பது இயற்கை.

இயற்கையில் உயிரை உருவாக்குவது தான் ஈர்ப்பிற்கான காரணம். ஆண் பெண் இணையும் போது உயிர் உருவாகும். எனவே தான் ஈர்ப்பு என்பது இயற்கை. இது மனிதன் மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இதில் மனம் சார்ந்த ஈர்ப்பாக காதல் மனித இனத்திற்கு உருவாக்கம் நிகழ்கிறது.

ஆனால் மனித இனம் அறிவின் வளர்ச்சியால் பல சட்ட விதிகள் மற்றும் சமூக சூழ்நிலைகளை உருவாக்கி அதில் பொருந்தி வாழும் முறைக்கு வந்துவிட்டோம். எனவே உடல் ஈர்ப்பு தவறாக பார்க்கப்படுகிறது.

எனவே ஈர்ப்பு இயற்கை என்று செயலில் இறங்கக் கூடாது. ஊருடன் ஒத்து வாழ் என்பது போல இன்று உள்ள சமூக சூழ்நிலைகள் சட்டம் விதிகளின் படி வாழ வேண்டும். இல்லை என்றால் பல சிக்களை உருவாக்கிவிடும்.

மேலும் மனம் தொடர்பான ஈர்ப்பு என்பது பல காலங்கள் கடந்தும் நினைவில் நிற்கும்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி