கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

1) தந்தை தாய்

பனாரசி லால் சாவ்லா - சன்யோகிதா தேவி

2)பிறப்பு

இந்தியா ஹரியானா மாநிலம்
கர்னல் ஊர்
பஞ்சாபி குடும்பம் 
17/3/1962

3) சகோதரர்
சஞ்சய் சாவ்லா .

சகோதரர் கருத்து
எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம், ஆகவே அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான ஒரு நட்சத்திரம். அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்  என்றார்

4)சகோதரிகள்
சுனிதா, தீபா

5)கணவர்
1983 ஹாரிசன் (விமான பயிற்சி ஆசிரியர்)

6) விமானம் ஓட்டும் ஆர்வம்
இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபரும் விமான ஒட்டியுமான ஜே ஆர் டி டாட்டாவை பார்த்ததிலிருந்து விமானம் ஓட்டும் ஆர்வம் கல்பனா சாவ்லாவுக்கு ஏற்பட்டது

7)துறை
விண்வெளி வீரர்,
விண்வெளி பொறியியலாளர்,
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்.

8)இந்தியாவின் முதல்  பெண் விண்வெளி வீரர் 
சோவியத் விண்கலத்தில் பயணித்த முதல் இந்திய வீரர் ராகேஷ் சர்மா.      (விண்வெளிக்கு பயணித்த வீரர்களில் 108 வது விண்வெளி வீரர் ) அடுத்ததாக விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண் கல்பனா சாவ்லா .

முதல் விண்வெளி பயணம் கொளம்பியா விண்வெளி ஊர்தி STS - 87 (372 மணி நேரம் ஆய்வு)
இரண்டாவது விண்வெளி பயணம் கொளம்பியா விண்வெளி ஊர்தி -      STS-107 ( 16 நாள் ஆய்வு)

9) முனைவர் பட்டம்
விண்வெளி பொறியியலில் 1988 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்
Overset Methods Inc ன் துணைத் தலைவர் ஆனார் - 1988

10)இறப்பு
01/02/2003
அமெரிக்க கென்னடி விமான நிலையத்திலிருந்து 
கொலம்பியா விண்கலம் ( STC-107) தனது 16ம் நாள் ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பும்போது  அமெரிக்காவின் டெக்சாஸ் வான்பரப்பில் தரை  இறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது விண்கலம் வெடித்து சிதறி ஆறு பேருடன் தனது 41வது வயதில் இறந்தார்

11) கல்லறை அமைந்துள்ள இடம்
சீயோன் தேசிய பூங்கா
(தென் மேற்கு ஜக்கிய அமெரிக்காவின் யூட்டா)

12)மறைவிற்குப்பின் அளிக்கப்பட்ட
விருதுகள் 

*அமெரிக்க காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளி பதக்கம் 

*நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம்

 *நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம்
( NASA distinguished service medal)
Congressional Space Medal of Honor

13)ஒரு புதிய கிரகத்திற்கு கல்பனா பெயர்

*19/7/2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய கோல் ஒன்றுக்கு கல்பனா சாவ்லா பெயர் வைக்கப்பட்டுள்ளது
*நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு கல்பனா வே என பெயர் சூட்டப்பட்டுள்ளது 
*நாசா ஆய்வகம் கல்பனா சாவ்லா நினைவாக ஒரு அதிநவீன கணினியை அர்ப்பணித்துள்ளது
* இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் கல்பனா சாவ்லா விருது 2004 ஆம் ஆண்டில் இருந்து வழங்கி வருகிறது







Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி