காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார்

1) தந்தை தாய்
தனதத்தனார் , தர்மவதி

2) கணவர் பெயர்
பரமதத்தன்

3) இயர் பெயர்
புனிதவதி

4) பிறப்பு இறப்பு
காரைக்கால் ( கிமு 300- 500), திருவாலங்காடு 
காரைக்காலில் சிவன் கோயிலில் இவருக்கு தனி கோயில் உண்டு.

5)  சிறப்பு 
63 நாயன்மார்களில்  மூவர் பெண்
அதில் காரைக்கால் அம்மையார் ஒருவர் 
63 பேரில் இவர் மட்டுமே அமர்ந்தபடி இருப்பார் 

6) எழுதிய நூல்கள்
அற்புத திருவந்தாதி
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
திரு இரட்டை மணிமாலை 

7) இறைவனிடம் பெற்ற வரம்
A) பேய் வடிவம் வேண்டும் என்று வேண்டிப் பெற்றார்.
கைலாசம் இறைவன் உறையும் புனித இடம் என்பதால் தலைகீழாக நடந்து சென்றார் . அம்மையே வருக என இறைவன் வரவேற்றதால் காரைக்கால் அம்மையார் என பெயர் காரணம் பெற்றார்.

B)நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்றுள்ளார் .

8) பெயர் காரணம்
இறைவன் அம்மையே என்று அழைத்ததால் காரைக்கால் அம்மையார் என்றானார். 

9)  சிறப்பு நிகழ்வு
கணவன் கொண்டு வந்த மாங்கனியில் ஒன்றை சிவனடியாருக்கு வழங்கி விட்டார் .
கணவன் கேட்கும் போது இறைவனிடம் வேண்டி மீண்டும் மாங்கனி பெற்று கணவருக்கு பரிமாறினார். 
இதனால் தெய்வத்தன்மை வாய்ந்த பெண்ணுடன் இல்லற வாழ்வில் இருப்பது தவறு என கணவர் பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டார்.

10) 3 பெண் நாயன்மார்கள்

A) காரைக்கால் அம்மையார் 

B) மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாற நாயனார் ஆவார். அவரின் மனைவி மங்கையர்க்கரசிமார் மற்றொரு பெண் நாயனார் ஆவார்.

C) திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் ( அப்பர், சுந்தரர், சம்பந்தர் மாணிக்கவாசகர்) ஆவார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி