பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும் 

(இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்) 

புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம் 

2) வள்ளுவரும் கற்பும் 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை.

"தெய்வத்தை தொழாமல் தன் தலைவனை தொழுகின்றவள், மழையை பெய்யன்றால் பெய்யும்"

வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கற்புக்கு இம்மாதிரியான கருத்துக்களை கூறியிருக்க மாட்டார்.

எந்த பெண்ணரசியாகிலும் தன்னை ஆண் பிறவிக்கு அடிமை என்றாவது, தாம் அப்பிறப்பிக்குக் கீழ்பட்டவர்கள் என்றாவது, ஆண் தன்மையை விட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெண்ணரசி என்று சொல்ல நாம் ஒருகாலும் ஒப்போம்.

அவ்வையாரின் 
"தையல் சொற்கேளேல்" ( பெண்கள் சொல்லை கேட்கக் கூடாது)
"பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்"( அறியாமை பெண்களின் ஆபரணம்)
 வள்ளுவரின் 
"பெண்வழிச் சேரல்" ( பெண்கள் இஷ்டப்படி நடக்கக் கூடாது)
பெண்களும் பகுத்தறிவுள்ள, சிந்தனா சக்தி உள்ள மனித ஜீவன் தான் என்பதை ஒப்புக் கொள்ளும் எவரும் மேலே சொல்லப்பட்ட மூன்றையும் ஒருக்காலும் நடுநிலை உள்ளவர் வாக்கென்றோ, உண்மையை ஆராய்ந்த அறிவுடையோர் வாக்கின்றோ ஒப்புக்கொள்ள முடியாது என்பதே எமது கருத்து என்கிறார். இங்கு சற்று வாசகர்களுக்கு சங்கடம் உண்டாகும் என்பது நமக்குத் தெரியும் ஆகினும் குற்றமில்லை என்கிறார். 

இந் நீதி நூல்கள் சொல்லப்பட்ட காலம் ஆரிய ஆதிக்கம் பரவி இருந்த காலம் என்பதையாவது ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.  தவிர அவ்வை பிராட்டியார் பெயரிலோ வள்ளுவர் பெயரிலோ சொல்லப்பட்ட நீதிகளை ஆக்கிய கர்த்தர்கள் நம்மை போன்ற மனிதத் தன்மை வாய்ந்தவர்கள் என்பதை முதலாவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்மக்கள் தமது உரிமையையும், தேவையையும் ஆண்மக்கள் தடை இல்லாமலும், பெண்ணின தடை இன்றி அவர்களுக்குத் துன்பமில்லாமல் பெறுதலும், ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதும் ஆண் பெண் சமத்துவமாகும் என்று அவரின் நண்பர் தெரிவித்ததாகவும் அதில் ஆண் உரிமை யாது? பெண் உரிமை யாது? அன்னாரின் தனித்தனி தேவைகள் யாவை என்பதை பற்றி முழுமையாக சொல்லவில்லை என்கிறார்.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவென்றால் ஆணை போலவே பெண்ணுக்கு வீரம், வன்மை, கோபம், ஆளும்திறன் உண்டு என்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

அன்றியும், மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலருக்கும் அவரின் தோழர் குறிப்பிட்ட இருபாலர் குணங்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்.  இரு பாலருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது.  ஆனால், அது செயற்கையால் - ஆண்களின் சுயநலத்தால் - சூழ்ச்சியால் மாறுபட்டு வருகின்றது.

கர்ப்பமாக பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெறுகின்ற குணம் பெண்களுக்கு இருப்பதாலேயே பெண்கள் நிலை ஆண்களை விட எந்த விதத்திலும் அதாவது வீரம், கோபம், ஆளுந்திறன், வன்மை  முதலியவைகளில் மாறுபட்டுவிட வேண்டியது இல்லை.
கர்ப்பம் தரித்து பிள்ளை பெறாத காரணத்தாலேயே ஆண் மக்களுக்கு அன்பும், சாந்தமும், பேணும் திறனும் பெண்களை விட மாறுபட்டதாகி விடாதென்றும் சொல்லுவோம்.

உண்மையான சமத்துவத்திற்கு மதிப்பு கொடுப்போமானால், உண்மையான அன்பு இருக்குமானால், பிள்ளையை சுமந்து பெரும் வேலை ஒன்று தவிர, மற்ற காரியங்கள் இருவருக்கும் ஒன்று போல இருக்கும் என்பது உறுதி. 

"சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் 
நிறைகாக்குங் காப்பே தலை"

"நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிரநெஞ்சின் 
பேணிப் புணர்பவர் தோள்"
மேற்கண்ட குரல்களில் காவலனால் பெண்கள் கற்பா இருப்பதால் பயனில்லை பெண்கள் தாங்களாகவே கற்பாக இருக்க வேண்டும் இரண்டாவது குரல் விலைமாதரை புணர்கின்றவர்க்கு கூறிய வழிமுறை இல்லாமல் காதல் கொண்ட மற்ற பெண்களை கூடி திரியும் ஆண்களை குறித்து கூறியதல்ல என்பது அவரின் அபிப்பிராயம் என்கிறார். 

இந்த இரண்டு குறள்களைப் பற்றி, சரி என்று பட்டதை சொல்லும் தன்மை  எவனிடம் இருந்தாலும், அவன் இக்குறள் மாத்திரமல்ல இது போன்ற வகைகள் பலவற்றிற்கும், மற்றும் அநேக காரியங்களுக்கும் தயாராகயிருக்க வேண்டியவன்தான் என்கிற முடிவால் கவலைப்படவில்லை என்கிறார்.

-பெரியார் 

கருத்து: ஆண் , பெண் என்ற இன பேதமில்லாமல் வாழ்வியல் முறைகளிலும், சட்ட வழிவகைகளிலும் இருவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி