Posts

மகாபாரத கதாபாத்திரங்கள்-திருஷ்டதியுமனன் முன் ஜென்மம்

திருஷ்டத்யும்னன் முன் ஜென்மம் பாஞ்சால மன்னனான துருபதன் புத்திரகாமி யாகம் என்ற வேள்வியை செய்தான். துருபதனுக்கு துரோணர் உடன் பகை இருந்தது.  துரோணரை கொல்லும் வல்லமை பெற்றவனாக தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று வேள்வியில் வேண்டினான். அதன் மூலம் வலிமை மிக்க இளைஞன் ஒருவன் ஆயுதங்களுடன் தோன்றினான அவனே திருஷ்டத்யுமன் . இவனே முன்ஜன்மத்தில் ஏகலைவனாக பிறந்திருந்தான் அப்போது அவரது குருவான துரோணர், ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சணையாக கேட்டுப் பெற்றார்.   ஏகலைவன் இறக்கும்போது அடுத்த ஜென்மத்தில் துரோணரை கொள்ளும் பிறப்பாய் என கிருஷ்ணர் வரமளித்தார்.  அதன்படி அடுத்த ஜென்மத்தில் துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனாக   பிறப்பெடுத்து குருஷேத்திரப் போரில் துரோணர் கொன்றான்.

மகாபாரத கதாபாத்திரங்கள்- பீஷ்மர் முன் ஜென்மம்

பீஷ்மர் முன் ஜென்மம் காசிபர் - வாசு ( தட்சனின் மகள்) தம்பதிகளின் மகன்கள் அஷ்டவசுக்கள் . அஷ்டவசுக்கள் என்பவர்கள் இயற்கையை நிர்வகிப்பவர்கள்.  அவர்களில் பிரபாசன் என்ற வசு தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மற்ற வசுக்களுடன் சேர்ந்து வசிஷ்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில் வசிஸ்டரால்  மண்ணுலகில் பிறக்க சாபமிட்டார் . மண்ணுலகில் பிறக்கும்போது பிரபாசனுக்கு   மனைவி பாக்கியம் இருக்காது என்றும் சாபமிட்டார். அதன்மூலமாக அஷ்டவசுக்கள் தேவலோக மங்கையான கங்கையை அணுகினர் மற்றவர்களுக்கு மண்ணுலகில் பிறந்தவுடன் சாபவிமோசனம் பெறவும் பிரபாகரனுக்கு மட்டும் மண்ணுலகில் நெடுங்காலம் வாழவும் கங்கையின் மைந்தர்களாக பிறக்க வேண்டிக்கொண்டனர். அதன்படி கங்கை (கணவர் சந்தனு)  தனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் பிறந்தவுடன் ஆற்றில் விட்டார்.  எட்டாவது மகனான தேவவிரதனை  ( பீஷ்மர் )வளர்த்து ஆளாக்கி  அவனது தந்தையான சந்தனு மகாராஜாவிடம ஒப்படைத்தார்.

மகாபாரத கதாபாத்திரங்கள்-ஜரா

ஜரா முன் ஜென்மம்   துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணன் பூலோகத்தில் இந்த அவதாரம் முடியப்போகும் சூழ்நிலையில் தன் இறுதிக்காலத்தை அறிந்து ஒரு நாள் அடர்ந்த காட்டுப் பகுதியில் புதர் அருகில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு வேடன் முயலை துரத்திக் கொண்டு வந்தான் புதர் பகுதியில் இருந்த கிருஷ்ணனின் கால்களை பார்த்து முயல் என்று நினைத்து அம்பெய்தினான். அது கிருஷ்ணனின் வலது காலில் பலமாக தைததது. உடன் அந்த வேடன் கிருஷ்ணரிடம் ஓடி வந்து மன்னிப்பு கோரினான் .அப்பொழுது கிருஷ்ணன் , நான் திரேதயுகத்தில் ராமனாக அவதரித்தபோது வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி கொன்றேன்.  அப்பொழுது வாலி " இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும் என்று கூறி சாபமிட்டான்". அந்த வாலியே இந்த ஜென்மத்தில் ஜராவா பிறந்து என்னை அம்பெய்தி உள்ளாய் என்று கூறினார். இன்றுடன் என்னுடைய இந்த அவதாரத்தின் பூலோக வாழ்வு நிறைவடைகிறது என்று கூறி நீ நீடூழி வாழ்வாயாக என்று வாழ்த்தினார்.

மகாபாரத கதாபாத்திரங்கள்-முன்ஜென்மம், அம்சங்கள்

முன் ஜென்மம்/முற்பிறவி 1) கர்ணனின் முன் ஜென்மம் 2அர்ச்சுனன் முன் ஜென்மம்  3)சிகண்டி முன்ஜென்மம் 4) திருஷ்டதியுமனன் முன் ஜென்மம் 5)திரௌபதி முன் ஜென்மம் 6) ஜரா முன்ஜென்மம்  7) பீஷ்மர் முன்ஜென்மம் 8) திருதராஷ்டிரன் முன்ஜென்மம் அம்சங்கள் 1) யுதிஷ்டிரன்- எமதர்மன் 2) பீமன் - வாயு 3)அர்ஜுனன் - இந்திரன் 4)நகுலன் சகாதேவன்  - அஸ்வினி தேவர்கள் 5)கிருஷ்ணன் - விஷ்ணுவின் அவதாரம் 6)பலராமன்- விஷ்ணுவின் அவதாரம்/ஆதிசேஷன் அவதாரம் 7) துர்வாசர்- உருத்திரன் 8) தத்தாத்ரேயர்- விஷ்ணு/மும்மூர்த்திகள் 9)பதஞ்சலி- ஆதிசேஷன் 10)சந்திரன்- பிரம்மா 11)சத்தியபாமா- பூமாதேவி 12)ருக்மணி- லட்சுமி 13)பிரத்யுமனன்- மன்மதன் 14)ருக்மாவதி- ரதி 15)சுபத்திரை- யோகமாயை 16)அபிமன்யு- சந்திரனின் மகன் 17)விதுரன்- எமதர்மன் 18) அஸ்வத்தாமன் - சிவன்

மகாபாரத கதாபாத்திரங்கள்- சபதங்கள், சாபங்கள், வரங்கள்

சபதங்கள், சாபங்கள், வரங்கள் சபதங்கள் 1) துரோணரின் சபதம 2) பரசுராமரின் சபதம் 3) சகுனியின் சபதம் 4) பாஞ்சாலி சபதம் 5) பீமனின் சபதம் 6)அம்பையின் சபதம் சாபங்கள் 1)கசன் தெய்வானைக்கு அளித்த சாபம் 2) தேவயானி கசனுக்கு அளித்த சாபம் 3)பரீட்சித்து மன்னன் பெற்ற சாபம்  4)கிருஷ்ணனுக்கு காந்தாரி இட்ட சாபம்  5) சகுந்தலைக்கு துர்வாசர் இட்ட சாபம்  6) அர்ச்சுனனுக்கு ஊர்வசி இட்ட  சாபம்  7)கௌதமர் இந்திரனுக்கு அளித்த சாபம்  8)கங்கை சந்தனு பூலோகத்தில் பிறப்பெடுக்க இந்திரன் இட்ட சாபம்  9)யயாதிக்கு சுக்கிராச்சாரியார் இட்ட சாபம்  10)கிண்டமா முனிவர் நளாயினிக்கு இட்ட சாபம் 11)இந்திரனுக்கு துர்வாசர் எப்ப சாபம் 12) ருக்மணிக்கு துருவாசர் இட்ட சாபம் 13) இலாவின் சாபம்  14)கர்ணனுக்கு பூமாதேவி இட்ட சாபம்  15)அஷ்டவசுக்களுக்கு வசிஷ்டர் இட்ட சாபம் 16) மாண்டவ்ய முனிவர் நாளாகி விட்ட சாபம் 17) துர்வாசர் மும்மூர்த்திகளுக்கு இட்ட சாபம் 18) கர்ணனுக்கு பரசுராமர் இட்ட சாபம் 18)கர்ணனுக்கு பிராமணர் இட்ட சாபம் 19) திரௌபதி கடோத்கஜனுக்கு இட்ட சாபம்  20)திரௌபதிக்கு இட்ட சாபம் 21) அர்...

மகாபாரத கதாபாத்திரங்கள் (140)- சனகாதி முனிவர்கள்

சனகாதி முனிவர்கள் பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்கள் சனகாதி முனிவர்கள் ஆவர்  சனகர் சனாநந்தர் ,  சனத்குமாரர் சனத்சுஜாதியர்   இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று பிரம்மா உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூறி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். பிரம்மச்சரிய ஆசிரம வாழ்வை மேற்கொண்டு அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பிவந்தனர். திருதராஷ்டிரனுக்கு   விதுரன் கேட்டுக் கொண்டதற்கிணஙக சனத்குமாரர் பிரம்ம ஞானத்தை போதித்தார். சனகாதி முனிவர்கள் சுக்ராச்சாரியார் (அசுரர்களின் குரு)மற்றும் விருத்திராசூரனுக்கும் (அசுரர்களின் தலைவன்)  உபதேசம் வழங்கினர்

மகாபாரத கதாபாத்திரங்கள் (127)- வைசம்பாயனர்

வைசம்பாயனர் 1)யாரின் சீடன் வேதவியாசர் 2) மகாபாரதம் ஜனமேஜயனுக்கு யார் சொன்னது வேத வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதம். அவரின் சீடரான வைசம்பாயனர்   ஜனமேஜயன் நடத்திய வேள்வியின் போது  வைசம்பாயனரால்  எடுத்து கூறியதாக சொல்லப்படுகிறது வைசம்பாயனர் எடுத்துரைத்த மகாபாரதக் கதையை கேட்ட உத்திரசிரவஸ்  என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான  நைமிசாரண்ய  முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். 3) மகாபாரதத்தின் முதல் பெயர்  ஜெயா பின்னாளில் பாரதம் என்றும் பின்பு மகாபாரதம் என்றும் அழைக்கப்படுகிறது.