Posts

வாழ்வியல் கலை- சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி

சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி  மகிழ்ச்சியான வாழ்விற்கு நமது மனமுதிர்ச்சியும் (maturity to the mind) முக்கிய பங்கு வகிக்கிறது, மனம் அமைதியான நிலையில் பதட்டமின்றி எப்போதும் வைத்திருக்க முயல்வதும், எந்த செயலையும் மன அமைதியுடன் செய்ய முற்படுவதும், புரிந்து கொள்வதில் முதன்மை நிலையில் இருப்பதும், எந்த சூழ்நிலைகளையும் தனதாக்கி சிறப்பானதாக உருபெறச்செய்வதும் முழு மனமுதிர்ச்சி உடையவர்களிடம் இயல்பாக இருக்கும். எது நல்லது எது கெட்டது, எது சரி எது தவறு என அட்டவணையிட்டு வகைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காலச்சூழலுக்கு ஏற்றவாறு மனிதனுக்கு மனிதன் மாறுபடும் செயல்பாடுகளை பகுத்தறிந்து ஏற்பதும், நிதர்சனத்தை புரிந்து கொள்வதும் முழு மனமுதிர்ச்சி கொணடர்வர்களின் குணமாகவும் அமைந்திருக்கும்.  ஒரளவிற்கான மனமுதிர்ச்சி கொண்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்வது நம்முடன் பிரயாணிப்பவர்களுக்கு நம்முடனான பயணம் இனிமையானதாகவும், விருப்பமுள்ளதாகவும் அமையும். மனமுதிர்ச்சி ஏன் வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படும் போது, மற்றவர்களை திருத்துவதை பிரதானவேலையாக எடுத்து நமது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் சக மனிதர்களுடனான ...

வாழ்வியல் கலை- சுயமதிப்பை வளர்த்தல்

சுயமதிப்பை வளர்த்தல் சுயமதிப்பு என்பது அவரவர் அவரரை விரும்புதல், ஏற்றுக்கொள்ளுதல், அங்கீகரித்தல், மதித்தல் மாற்றத்தை ஏற்றல் போன்றவற்றுடன் தொடர்புடையது. நாம் முதலில் நம்மை விரும்ப வேண்டும். இது மனம் சார்ந்த ஒன்றாகும். நமக்கான புறசூழல்களை அங்கீீகரித்து முன்னேற்றத்திற்கான வழிகளை தேடுதல் சுயமதிப்பை கூட்டும்.  சுயத்தை வெறுப்பதையும் சுயத்தை கேலிப்பொருளாக மற்றவர்கள் முன் சித்தரிப்பதும் சுயமதிப்பை வேரருக்கும்.  சுயமதிப்பை வளர்த்தலின் அவசியம் யாதெனில் நாம் நம்வாழ்வில் நம்மையும் மதித்து சக மனிதர்களையும் மதித்து நமது வாழ்வை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான வழிதேடுதல் அவசியம். விதியை தொடர்ந்து நொந்து சொல்வதை விடுத்து, நாமே நம்மை விரும்பி, நம்மிடம் உள்ள திறமையை தேடி எடுத்தலும் உயர் லட்சியங்களை பொருத்தி அதனை அடைதலுக்கான மார்க்கங்களை காணுதலும் வாழ்வில் நிச்சயம் வெற்றி தரும். நாம் நம் மீது வைத்திக்கொள்ளும் கணிப்பே சுயமதிப்பு  ஆகும். அதாவது நம்மைப்பற்றி நாம் என்ன உணர்கிறோம் என்பது சுயமதிப்பு ஆகும். உயர் சுயமதிப்பு கொண்டவர்கள் எப்போது மிக்க தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் தன்னைத்தானே விரும்பு...

மகாபாரத கதாபாத்திரங்கள்-வியூகங்கள்

மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்கள் வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட வியூகங்கள் (படைகளின் அமைப்புகள்). மகாபாரதப் போரில்  கையாளப்பட்ட 17 போர் வியூகங்கள் 1) நாரை வியூகம் (Heron Formation) 2)முதலை வியூகம் (Crocodile Formation) 3)ஆமை வியூகம் (Tortoise or Turtle Formation) 4)திரிசூலம் வியூகம் (Trident Formation) 5)சக்கர வியூகம் (Wheel or Discus Formation) 6)பூத்த தாமரைமலர் வியூகம் (Lotus Formation) 7)கருட வியூகம் (Eagle Formation) 8)கடல் அலைகள் போன்ற வியூகம் (Ocean Formation) 9)வான் மண்டல வியூகம் (Galaxy Formation) 10)வைரம் / வஜ்ராயுத (இடிமுழக்க)போன்ற வியூகம் (Diamond or Thunderbolt Formation) 11)பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம் (Box or Cart Formation) 12)அசுர வியூகம் (Demon Formation) 13)தேவ வியூகம் (Divine Formation) 14)ஊசி போன்ற வியூகம் (Needle Formation) 15)வளைந்த கொம்புகள் போன்ற வியூகம் (Horned Formation) 16)பிறை சந்திர வடிவ வியூகம் (Cr...

வாழ்வியல் கலை - நேர்மறை சிந்தனைகள்

நேர்மறை சிந்தனைகள்:-   நேர்மறை சிந்தனைகள் என்பது, மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமாகும்.  மகிழ்ச்சியான வாழ்வியலில் விரும்பியதை ஈர்ப்பதற்கும், வெற்றிக்கான பாதையை தேர்ந்தெடுப்பதற்கும், இலக்கை நோக்கி நகர்வதற்கும், செல்வத்தை ஈர்ப்பதற்கும் என பல்வேறு நிலைகளுக்கு, நமது  நேர்மறை சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள், நேர்மறை வார்த்தைகள் போன்றவை மார்க்கங்களாக அமைகிறது.  நேர்மறை வார்த்தைகள் வெளிப்பட வேண்டும் எனில், நமது சிந்தனைகள்  நேர்மறையாக அமைய வேண்டும்.        “நீ எதுவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதுவாக ஆவாய்” என்ற சுவாமி விவேகனந்தரின் வரிகள்,  இதனை உறுதி செய்கின்றன.        நேர்மறை எதிர்மறை என இரு வாக்கியங்களைத்தான்  நாம் வாழ்வில் அதிகம் பயன்படுத்துகிறோம்.  நாம் தினம் பயன்படுத்தும் வாக்கியங்களில் பெரும்பாலும் இடம் பெறுபவை, நேர்மறை வாக்கியங்களா? எதிர்மறை வாக்கியங்களா?  எனச்சிந்தித்து, மாற்றம் தேவைப்படின், மாற்ற வேண்டும். நம் எதிர்காலம் பற்றிய பயமும், சூழ்நிலைகளால் ஏற்படும்  தாக்கத்தினால்தான், எண்ணங...

வாழ்வியல் கலை- இறைநம்பிக்கை பற்றிய தெளிவு

இறைநம்பிக்கை பற்றிய தெளிவு:-   நாம் பிறந்து வளரும் சூழ்நிலைகள், நமக்கான இறைமார்க்கத்தை தீர்மானிக்கிறது. கடவுள், இறைவன் என்பவர் பிரபஞ்சம் முழுவதையும் படைப்பவராகவும், காப்பவராகவும், இறப்பை தீர்மானிப்பவராகவும்  உள்ள மாபெரும் சக்தி கொண்டவராக, இறைநம்பிக்கை கொண்டவர்களால் நம்பப்படுகிறது.  பல்வேறு மதங்களை ஒட்டி, இறைவன் பலவித வடிவம் பெறுகிறார். அன்பும், கருணையுமே  கடவுள் என்றும்,  இயற்கையே  கடவுள் என்றும், இறைவன் உருவமற்றவர் என்றும் பல்வேறு விதமாக  நம்பப்படுகிறது.   பிரபஞ்சத்தின்  மொத்தத்தையும்,  கடவுள் என்ற ஒருவரோ/பலரோ ஆளுமை செய்யவில்லை என்பது,  கடவுள் மறுப்பவர்களின் கருத்தாகவும் உள்ளது. கடவுள் மனிதனை படைத்தார் என்பவர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆத்திகர்கள் என்றும், மனிதன் கடவுளை படைத்தான் என்பவர்கள்  கடவுள்  நம்பிக்கை இல்லாதவர்கள்  நாத்திகர்கள்  என்றும் சுருக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.                இந்த கட்டுரையின் நோக்கம் கடவுள் இருக்கின்றாரா, இல்லையா, எந்த கடவுள...

வாழ்வியல் கலை

தன்னம்பிக்கை மாத இதழில் தொடராக இந்த கட்டுரைகள் வெளி வந்தது. தலைப்பு : வாழ்வியல் கலை பாகங்கள் 1)  பெண்கள் 2) பதின்பருல துளிர் காதல் 3)  வெற்றியின் அவசியம் 4) சமூக வேலிகள் 5)  குழந்தைகளுடன் பழகுதல் 6)  நண்பர்களை தேர்ந்தெடுத்தல் 7) கனவுகளின் வலிமை 8)  மனசாட்சி ஒரு பார்வை 9) மனஅழுத்தம் உடைத்தெறிதல் 10) இறைநம்பிக்கை பற்றிய தெளிவு 11) நேர்மறை சிந்தனைகள் 12) சுபமதிப்பை வளர்த்தல் 13) சூழலுக்கேற்ற மனமுதிர்ச் சி  14 )மாற்றம் ஒன்றே மாறாதது 15) நிகழ்காலத்தில் வாழ்தல் 16) ஆண் பெண் உளவியல் 17)  உறவுகளுடனான பயணம் 18) நேர்மறை உணர்வுகள் 19) எது சரி எது தவறு 20) அளவுடனான நேசம்

விஜயசக்தி

Image
Honurary Doctorate  Facebook page  டாக்டர். ஏ. விஜயசக்தி   B.A.,BLIS.,M,B.A.,HDCM.   கல்பாக்கம் , செங்கல்பட்டு மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின்  இணைப்பதிவாளர், தமிழ்நாடு அரசு இதுவரை பணியாற்றியுள்ள மாவட்டங்கள் கடலூர் விழுப்புரம் சென்னை கோயம்புத்தூர் நாமக்கல் ஈரோடு சேலம் மின்னஞ்சல்- vijayasakthijrcs@gmail.com (Selected by TNPSC ( Group 1), Gazetted officer, Joint Registrar, Coop Department Tamil Nadu Govt) பட்டிமன்ற பேச்சாளர், ஊக்கப்பேச்சாளர்(motivational speaker), சுயமுன்னேற்றக் கட்டுரையாளர்/வாழ்வியல் கலை கட்டுரையாளர் *************************************** சமூகப் பார்வை *************************************** தற்போது ஆற்றும் பணி (18/12/2024 முதல்) விழுப்புரம் மாவட்டம் மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவுத் துறை, விழுப்புரம் மாவட்டம். *************************************** முன்பு ஆற்றிய பணிகள் (2010- 2012) கடலூர் மாவட்டத்தில் 1)துணைப் பதிவாளர்/ முதன்மை வருவாய்...