மகாபாரத கதாபாத்திரங்கள் (99)-அனிருத்தன்

அனிருத்தன்

1)தந்தை தாய்

பிரத்யுமனன்-ருக்மாவதி ((ருக்மணியின் அண்ணன் ருக்மியின் மகள்)

2)தந்தை வழி தாத்தா


3) மனைவி

பானாசூரன் மகள் உஷஸ்(உஷா)

4)இறப்பு

கிருஷ்ணரின்  மகனான சாம்பனை கருவுற்ற பெண் போல் வேடமிட்டு, தவக்கோலத்தில் இருந்த முனிவர்கள் முன் நிறுத்தி, இக்கர்ப்பிணிக்கு என்ன குழந்தை பிறக்கும் கேட்க, கோபமுற்ற முனிவர்கள், உங்கள் குலத்தை பூண்டோடு அழிக்க வல்ல இரும்பு உலக்கை பெற்றெடுப்பாள் என சாபமிட்டனர்.

கருவுற்று பெற்ற இரும்பு உலக்கையை யாதவர்கள் பொடியாக்கி துவாரகைக் கடலில் கரைத்தனர். பின்னர் கடற்கரையில் ஒதுங்கிய இரும்புத் துகள்கள், கோரைப்புற்களாக அடர்த்தியாக வளர்ந்து நின்றன. ஒரு சமயம் கிருதவர்மன் மற்றும் சாத்தியகி  தலைமையில் அவ்விடத்தில் கூடிய அனைத்து யாதவர்கள் அளவு மீறி மது அருந்திய போதையில், ஒருவருடன் ஒருவர் வீண் விவாதம் செய்து சண்டையிட்டு கொண்டனர். ஒரு காலகட்டத்தில் இரும்பு ஈட்டிகள் போன்ற கோரப்புற்களால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்ந்தனர்.

இச்சண்டையில் யாதவ முதியோர்கள், பெண்கள், குழந்தைதள் தவிர பிரதியும்மனன் ,சாம்பன் ,அனிருத்தன், சாத்தியகி ,கிருதவர்மன்  போன்ற அனைத்து யாதவர்களும் மாண்டனர்.


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி