உணர்ச்சிகள் ( Feelings)

உணர்ச்சிகள் (Feelings)

"எந்த உணர்ச்சியில் தொடர்ந்து இருக்கின்றோமோ அதை அதிகரிக்கச் செய்வதை பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவம்"

உணர்வுகள் -- உணர்ச்சிகள் வேறுபாடு

1)நமக்குள் இருக்கின்ற சிறு வயது பதிவுகள், நாம் பின்பற்றுகின்ற மத நம்பிக்கைகளால் கொடுக்கப்பட்டுள்ள பதிவுகள், நமது புறச்சூழல்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்  ஆகியவைகளின் தாக்கமே நமது இயல்பாக இருக்கும்.
2)நமது இயல்பிலிருந்து விலகும் போது நமக்கு ஏற்படுவது உணர்வு.  நாம் அதை மற்றவர்கள் மீது வெளிப்படுத்துவது உணர்ச்சி .
3)உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டது என்ற புரிதல் இருப்பின் உணர்வு என்பது உணர்ச்சியாக மாறாமல் பார்த்துக் கொள்ளலாம்.  
4) உணர்வு என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்காது, அதை கட்டுப்படுத்தவும் தேவையில்லை. 
உணர்ச்சி என்பது நமது  கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் 
5) உணர்வு என்பது நமக்குள் இருப்பது உணர்ச்சி என்பது நம்மில் இருந்து மற்றவர்கள் மீது வெளிப்படுவது.

உதாரணமாக

கோவம் என்ற உணர்வு மற்றவர் செய்யும் விஷயம் நமது இயல்புக்கு எதிராக இருப்பின் நம்மில்  தோன்றிவது.

அதை நாம் வெளிப்படுத்தாமலோ, கோவ உணர்வை வேறு உணர்வாக மாற்றியோ, கடந்துவிடவும் முடியும் .
அவ்வாறல்லாமல் கோவத்தை அதற்கு காரணமான நபரை திட்டியோ, அடித்தோ , புறம் பேசியோ வெளிப்படுத்துவது கோவ உணர்ச்சி ஆகும்.

நல்லவற்றை ஈர்க்கும் உணர்வுகள்
(இவற்றை உணர்ச்சிகளாக மாற்ற வேண்டும்)

மகிழ்ச்சி
ஊக்கம் 
உற்சாகம் 
நன்றி உணர்வு 
மன நிறைவு 
சாதித்த உணர்வு 
புத்துணர்ச்சி
குதூகலம்


கெட்டவற்றை ஈர்க்கும் உணர்வுகள்
( இவைகள் உணர்ச்சிகளாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்)

கவலை 
வருத்தம் 
பயம் 
வெறுப்பு 
பாதிக்கப்பட்டவராக உணர்தல் 
பகை 
பொறாமை 
குற்ற உணர்வு 
கோபம் 
புறம் பேசுதல் 
சுய வதை 
துக்கம் 
துயரம்
சந்தேகம் 
புலம்பல்
குறை கூறல் 
தேவையற்ற வாதிடுதல்
அவமதித்தல்


பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்பது நாம் உணர்ந்து கொண்டிருக்கும் உணர்ச்சியை அதிர்வுகளாக பெற்று அதற்கு சமமான அதிர்வுகளை  நமக்கு ஈர்த்து வந்து தந்துவிடும் என்பதே பிரபஞ்ச விதி.
 எனவே நல்லவற்றை ஈர்க்கும் உணர்வுகளை மட்டும் உணர்ச்சிகளாக மாற்றி பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் படி நாம் நினைத்ததை அடைவோம்.

எண்ணம் போல் வாழ்க்கை
கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி