மகாபாரத கதாபாத்திரங்கள்-அஸ்திரங்கள்

அஸ்திரங்கள்

மகாபாரத கதாபாத்திரங்கள் பயன்படுத்திய வலிமை வாய்ந்த ஆயுதங்கள்

 காண்டீபம்- அர்ச்சுனனுக்கு  வருணன் அளித்தது

பாசுபத அஸ்திரம் --அர்ச்சுனனுக்கு
சிவபெருமான் அளித்தது

அந்தர்தானம்- அர்ச்சுனனுக்கு குபேரன் அளித்தது

வஜ்ரதத்ததம்- அர்ச்சுனனுக்கு இந்திரன் அளித்தது

அஞ்சலிகம்-கர்ணனை வதம் செய்ய அர்ச்சுனன் பயன்படுத்திய அம்பு 

சாரங்கம்- கிருஷ்ணருடைய வில்

சுதர்சனம்-கிருஷ்ணர் வைத்திருக்கும் சக்கரத்தின் பெயர் சுதர்சனம்

பர்வதாஸ்திரம்- எய்தும் போது கல் மழையை பெய்ய வைக்கக்கூடியது

கவுசிகீ--சகாதேவன் வைத்திருந்த புகழ்பெற்ற வாள்

 வைஜயந்தி---   கடோற்கஜனை வதம் செய்ய கர்ணன் பிரயோகித்த சக்தி ஆயுதம்

விஜயா -- கர்ணனின் தெய்வீகமான விஜயா வில்லினைை மகாபாரத போரில் பயன்படுத்தவில்லை (இந்திரன் தனது விஜயா என்ற சக்திவாய்ந்த வில்லை பரசுராமருக்கு அளித்தார்.
பரசுராமர் தனது சீடன் கர்ணனுக்கு அளித்தார்)
 
கோடாரி - பரசுராமர் (திருமாலின் 6வது அவதாரத்தில் பரசுராமருக்கு போர் கருவியான கோடரியை அளித்தவர் சிவபெருமான்)

 ப்ரஸ்வப்னாஸ்திரம் -- 
 அஷ்டவசுக்களிடம் இருந்து பீஷ்மருக்குக் கிடைத்த  ஆயுதம் 

பிரம்மாஸ்திரம்

இந்த ஆயுதம் படைப்பின் கடவுளான பிரம்மாவை நோக்கி தவமிருந்து பெறுவதாக கருதப்படுகிறது.
 இந்த  ஆயுதமானது எய்யும் நபர்கள் மந்திரத்தை உச்சரித்து சாதாரண அம்பினை கூட பிரம்மாஸ்திரமாக மாற்றி எய்துவதாகவும், 
தர்பை புல்லைக் கூட பிரம்மாஸ்திர மந்திரத்தினால் பிரம்மாஸ்திரமாக மாற்றாலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பிரம்மாஸ்திரத்தை செலுத்த தெரிந்தவர்கள், அதனை மீண்டும் திருப்பி அழைக்கும் மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். 
அருச்சுனனுக்கு தெரிந்த இம்மந்திரம், அசுவத்தாமனுக்கு தெரியாத காரணத்தினால், தனது நெற்றியில் இருந்த தெய்வீகமான மணியை இழந்தான்.
(அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரம் எய்தி அபிமன்யு மனைவியான உத்தரையின் வயிற்றில் இருந்த குழந்தைைையை அழித்தான்.
கிருஷ்ணன் தன்தவவலிமையால் அக்குழந்தையை பிழைக்கச் செய்தார்
 அக்குழந்தையே பரீட்சித்து மன்னன்)

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி